பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அரசன், தன்னைக்கண்டு மனக் கலக்கமடைந்ததை அறிந்த உம்மாதந்தி உடனே சாளரத்தை மூடிக்கொண்டு தன் அறைக்குப் போய் விட்டாள். உம்மாதந்தியைக் கண்டபிறகு, சிவி அரசகுமாரனுக்கு நகரத்தைச் சுற்றி ஊர்வலம் வருவதில் மனம் செல்லவில்லை. “சுநந்த, இது நமக்குத் தகுந்த ஊர்வலம் அல்ல. நமது நண்பர் சேனாபதியாகிய அஹி பாலருக்கே ஊர்வலம் தகுந்தது. என் சிம்மாசனம்கூட அவருக்குத்தான் தகுதி யானது. தேரைத் திருப்பி அரண்மனைக்குச் செலுத்துக” என்று தேர்ப் பாகனிடம் கூறினார். அரண்மனையை யடைந்ததும், அரசகுமரன் தமது அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தார். உம்மாதந்தியின் எண்ணமே அரசன் மனத்தில் இருந்தது. உம்மாதந்தியைப் பற்றித் தமக்குத்தாமே பேசிக்கொண்டார்.

"மலர்கள்போலும் அழகான மங்கை. கண்கவரும் ஆடை யணிந்து மான்விழி போலும் கண்களினால் என்னை மாடிமேலிருந்து பார்த்தபோது, அவள் முகம், வானத்தில் காணும் வெண்ணிலாவுடன் போட்டி போடுவது போன்றல்லவா இருந்தது!

66

'காட்டில் வாழும் கான் அறத்தெய்வமகள், மலைமேல் நின்று தன் அழகினால் மனத்தைக் கவர்வதுபோல, இவள் மாளி கையின் சாளரத்தில் நின்று தன் பார்வையினால் என் மனத்தைக் கவர்ந்துவிட்டாள்!”

66

காதுகளில் குண்டலங்கள் மின்ன, இக்கட்டழகி ஒற்றை ஆடை அணிந்து பெண்மான்போலக் கவர்ச்சிகரமாக நின்ற காட்சிதான் என்னே!”

நீண்டு செழித்து வளர்ந்த கருங்கூந்தலும், சந்தனம் பூசிய மெதுவான கைகளும், மெல்லிய விரல்களும் செந்நிறம் பூசிய நகங்களும், வசிகரமான தோற்றமும் உள்ள இந்த அழகி எப்போது என்னிடம் வந்து புன்முறுவல் செய்வாள்?”

“சிற்றிடை மங்கை, பொன்மாலை மின்னும் மார்பழகி, காட்டிலே மரத்தின் மேலே படரும் பூங்கொடிபோல, என்னைப் புல்லித் தழுவ எப்போது வருவாள்?

"மதுவை மேலும் மேலும் குடித்து வெறியேறுவதுபோல, இவ்வழகிய மங்கை, எப்பொழுது எனக்கு முத்தங்கள் கொடுத்து என்னை மகிழச் செய்வாள்?"