பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

66

97

பலகணி அருகே உம்மாதந்தி நின்றதை நான் பார்த்த ணி உடனேயே, என் உணர்வு இழந்து அறிவு மயங்கினேன். அமைதியை இழந்து தூக்கத்தையும் இழந்தேன்.'

இவ்வாறு சிவி அரசன் அறிவழிந்து அரற்றிக் கொண் டிருந்தான்.

அரசனுடைய ஆயத்தார் அஹிபார்கனிடம், “அரசர் பெரு மான் நகர்வலம் செய்யப் புறப்பட்டு, உம்முடைய மாளிகை யண்டை வந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பி வந்துவிட்டார்' என்று கூறினார்கள். அஹிபாரகன் தனது மாளிகைக்குச் சென்று, அரசன் காணும்படி உம்மாதந்தி சென்றாளா என்று கேட்டான். அதற்கு அவள் கூறினாள்: “யாரோ ஒருவன் பானைபோன்ற பெரு வயிற்றையும், முறம் போன்ற பற்களையும் உடையவன் - தேரில் ஏறிக்கொண்டு இந்த வழியே வந்தான். அவனை அரசனோ யாரோ என்று சொன்னார்கள். நான் போய் சாளரத்தண்டை நின்று பூக்களைப் போட்டேன். பிறகு, அவன் தான் வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.'

இதைக்கேட்ட அஹிபாரகன், “ஐயோ, நீ என்னைக் கெடுத்துப் போட்டாய்” என்று கூறி, உடனே அரண்மனைக்குப் போனான். அரண் மனைக்குள் அரசன் இருந்த அறையண்டை சென்றான். அரசன் பிதற்றிக்கொண்டு உம்மாதந்தியின் பெயரைக் கூறியதைக் கேட்டான். கேட்டுத் தனக்குள் நினைத்தான்: 'உம்மாதந்தியின்மேல் அரசன் காதல் கொண்டிருக்கிறான். அவளைப் பெறாவிடில் இறந்துவிடுவான் போலிருக்கிறது. எனக்கும் அரசனுக்கும் அவமானமும் பாவமும் நேரிடாத வகையில் இதற்கு ஒரு வழி காணவேண்டுவது என்னுடைய கடமை.' இவ்வாறு எண்ணிய அஹிபாரகன் தன் மாளிகைக்குத் திரும்பி வந்தான்.

அஹிபாரகன் தன்னுடைய ஊழியர்களில் மன உறுதியும், வீரமும் உள்ள ஒரு ஆளை அழைத்து, “இன்று இரவு நீ போய் ஊர்க் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தெய்வீகமான மரத்தின் பொந்தில் புகுந்துகொண்டிருக்கவேண்டும். நான் நாளைக் காலையில் அவ்விடம் வந்து சில செய்திகளைக் கேட்பேன். அதற்கு நீ பொந்துக்குள் இருந்து கொண்டு இவ்வாறு பதில் சொல்லவேண்டும்” என்று சொல்லி, அவன் சொல்லவேண்டிய பதிலையும் அவனுக்குத் தெரிவித்தான். அவன் சொல்லவேண்டிய பதிலைப் பலமுறை சொல்லச்சொல்லி மனப்பாடஞ் செய்துவைத்தான். மனப்பாடஞ் செய்துகொண்ட அந்த ஊழியன்