பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

99

நழுவினேன். பிறர் மனைவியை விரும்பிய என் செயலை அறிந்து உலகம் என்னை இகழும். உம்மாதந்தியைப் பிரிந்தால் உமது மனமும் வருந்தும்.

அப்போது சிவி அரசனுக்கும் சேனாதிபதிக்கும் இவ்வாறு பேச்சு

நிகழ்ந்தது:

சேனாபதி:

"எனக்கும் தங்களுக்கும் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரியாது. உம்மாதந்தியைத் தங்களிடம் அனுப்புகிறேன். உமது காதல் தீர்ந்தபிறகு அவளை அனுப்பிவிடும்."

அரசன்:

“தான்

செய்யும் பாவத்தை

உலகத்தில் ஒருவரும் அறியவில்லை என்று ஒருவன் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், தெய்வங்களும் அறிஞர்களும் அவன் செய்த குற்றத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். நான் அவளைக் காதலிக்கவில்லை என்று நீர் சொன்னாலும், உலகம் அதை நம்பாது. அன்றியும் உமது மனம், உம்மாதந்தியைப் பிரிந்தபின், எவ்வளவு வேதனை அடையும்?” சேனாபதி:

"மன்னவ, அவள் எனக்கு உயிர்போன்று அருமையானவள் தான். நல்ல மனைவியாகவும் உள்ளவள்தான். ஆனால், காட்டில் வாழும் மிருகங்கள் சிங்கத்திற்கு உரிமையாதல்போல, அரசராகிய தங்களுக்கு அவள் உரியவள்.

அரசன்:

66

و,

‘அறிவுள்ளவர் எவ்வளவுதான் துன்பம் அடைந் தாலும் அந்தத் துன்பத்தைத் தீர்த்துக் கொள்ள நீதி தவறிப் பாவச் செயலைச் செய்ய மாட்டார்கள். அறிவற்ற மூடனாக இருந்தாலும், நீதிநெறியின் மேன்மையை அறிந்திருந்தால், அவன் குற்றம் செய்ய உடன்படமாட்டான்.

சேனாபதி:

"மன்ன! தாயுந் தந்தையாகவும், அரசனாகவும் ஏன், தெய்வம் போலவும் தாங்கள் இருக்கிறீர்கள். உமது அடிமையாகிய நானும் என் மனைவியும், ஊழியர்களும் உமக்கு உரியவர்கள். ஆகையால், அரச தங்கள் விருப்பப்படி எங்களை நடத்தலாம்.