பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

விளங்கக் கொற்றவை எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு நான்கு கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு சக்கரங்கள் ஏந்தி ஒர் இடது கையைத் தொடையின்மேல் ஊன்றி ஒரு வலக்கையில் அபய முத்திரை காட்டுகிறார். கழுத்து கை கால்களில் அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. தலைக்கு மேல் கொற்றக் குடை காட்சியளிக்கிறது. வலப்புறத்திலும் இடப்புறத்திலும், கொற்றவையின் ஊர்திகளான சிங்கமும் மானும் காணப்படுகின்றன. ஏவற்றொழில் புரியும் நான்கு பூதங்களின் குறள் உருவங்கள், கொற்றவையின் இருபுறத்திலும் அந்தரத்தில் இருப்பதுபோல காட்சியளிக்கின்றன. காலடியில், இருபுறத்திலும் இரண்டு ஆட்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர். கொற்றவைக்கு வலப்புறத்தில் இருப்பவன் இடது கையினால் தன் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு வலக்கையினால் தன் கழுத்தை அரிந்து கொள்கிறான்.

66

7. இளங்கோயில் கொற்றவை : மாமல்லபுரத்திலே, இப்போது 'துரௌபதை இரதம்" என்று பெயர் கூறப்படுகிற பாறைக்கோயில் கொற்றவைக் கோயிலாகும். இளங்கோயில் அமைப்பாக உள்ள இக் கோயிலின் சுவர்களில் கொற்றவையின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன.

இக் கோயிலின் திருவுண்ணாழிகை (கருவறையின் சுவரில் கொற்றவையின் திருவுருவம் தாமரைப்பூவின்மேல் நின்றவண்ணம் காட்சியளிக்கிறது. தலையில் காண்டக மகுடமும் காதுகளில் பத்திர குண்டலங்களும் கழுத்திலும் மார்பிலும் கை கால்களிலும் அணிகலன்களும் அணிந்து, அரையில் மணிமேகலை விளங்கக் கொற்றவை காட்சியளிக்கிறார். மேல் இரண்டு கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்தி ஒரு வலது கையை அபய முத்திரையாகவும் ஒரு இடது கையைத் தொடைமீது சார்த்தியும் சம்பீரமாக எழுந்தருளி யிருக்கிறார். குறள் உருவமுள்ள நான்கு பூதகணங்கள் ஆகாயத்தில் நிற்பதுபோல இருக்கின்றன. காலடியில், தரையின்மேலே இரண்டு

ட்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். வலதுபுறத்தில் உள்ள ஆள், தன் இடது கையினால் தன்னுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு வலது கையினால் கத்திகொண்டு தலையை அறுக்கிறான். மற்ற ஆள், கைகூப்பி வணங்கிக்கொண்டே தியானம் செய்கிறான்.