பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

105

8. துவார பாலிகை : கருவறையின் வாயிலின் வெளிப்புறத்தில் துவாரபாலிகையர் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளன. வலதுபுரத்துத் துவார பாலிகை எதிர்பார்வையாக நிற்கிறாள். தலையில் மகுட மணிந்து, காதுகளில் பெரியபத்திர குண்டலங்கள் அணிந்து, இடதுகையை இடுப்பில் ஊன்றி, வலது கையில் வாளேந்தி நிற்கிறாள். பக்கத்தில் கேடயம் இருக்கிறது.

இடதுபுறத்துத் துவாரபாலிகை சற்றுப் பக்கவாட்டமாக நிற்கிறாள். தலையில் மகுடமணிந்து, காதுகளில் பத்திர குண்டலங்கள் மின்ன, இடதுகையை இடுப்பில் ஊன்றி வலது கையில் பிடித்த வில்லைத் தரையில் ஊன்றி இருக்கிறாள். இடதுகாலை ஊன்றி வலதுகாலை மடக்கி நிற்கும் காட்சி காணத்தக்கது. வாயிலின் மேலே மகரதோரணம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயிலின் வெளிப்புறத்திலும் சுவர்களில் இதுபோன்ற கொற்றவையின் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின் புறச் சுவரில் (வெளிப் பக்கத்தில்) செதுக்கியமைக்கப் பட்டுள்ள கொற்றவை எருமைத் தலையின்மேல் நிற்பது போன்று அமைந்திருக்கின்றது.

இன்னொரு கொற்றவையின் சிற்ப உருவம் மாமல்ல புரத்து வராகப்பெருமான் குகைக்கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்ப உருவம், மாமல்லபுரத்து வராக மண்டபத்துக் கொற்றவை சிற்பம்போலவே (மேலே கூறப்பட்டது போலவே) உள்ளது. எட்டுக் கைகளுள்ள இந்தச் சிற்பம், எருமைத் தலையின்மேல் (மகிடாசுரன் தலை) நிற்பது போல அமைந்துள்ளது. இரண்டு புறத்திலும் இரண்டு பூதகணங்கள் அந்தரத்தில் நிற்கின்றனர். அவற்றிற்கு மேலே இரண்டு மூலையிலும் ஊர்திகளான சிங்கமும் கலை மானும் நிற்கின்றன. கொற்றவையின் காலடியில் இரண்டு ஆட்கள் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர்.

9. திருச்சி கொற்றவை : மாமல்லன் காலத்தில் அமைக்கப் பட்ட மற்றொரு கொற்றவையின் திருவுருவம், திருச்சிராப்பள்ளி மலையில் உள்ள குகைக்கோயில் சிற்பமாகும். திருச்சிராப்பள்ளி மலையில் இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. மேல் குகைக் கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. கீழ்க் குகைக் கோயில்