பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்தக் குகைக்கோயில் முழுதும் செம்மையாக அமைக்கப் படவில்லை. இக் குகைக்கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் கொற்றவையின் ருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் நான்கு கைகளுள்ள சிற்பம். பீடத்தின் மேல் கொற்றவை நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் காலடியில் இரண்டு மனிதர் தரைமேல் மண்டியிட்டமர்ந்து இருக்கின்றனர். அவர்களில் வலப்புறத்தில் இருப்பவன், வழக்கம்போலத் தன் தலையைத் தானே வாளினால் அறுத்துக்கொள்கிறான். இந்தச் சிற்ப உருவம், முக்கியமாக அடிப்பகுதி, செம்மையாகப் பூர்த்தி செய்யப்படாமலே விடப்பட்டிருக்கிறது.

மேலே கூறப்பட்ட கொற்றவைகளின் சிற்ப உருவங்களில், ஒரு ஆள் தன் கையினாலே தன் தலையை வாள் கொண்டு அரிந்து கொள்கிறதுபோல் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இதன் கருத்து என்ன?

வீரன் ஒருவன் தன் வழிபடு தெய்வமாகிய கொற்றவைக்குத் தன் தலையைப் பலியிடுவதை இச் சிற்பங்கள் காட்டுகின்றன. உயிரைப் பொருளென மதியாமல், வெற்றியையே உயிராகக் கருதும் வீரர்கள், கொற்றவைக் கோயிலில் சென்று, தங்கள் அரசன் வெற்றிபெறுவானாக என்று வரம் கேட்டுத் தங்கள் தலையைத் தாங்களே அறுத்துக் கொற்றவையின் திருவடிகளில் வைப்பது பண்டைக் காலத்து வழக்கம். இதனை.

“மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை

வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகெனக் கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்புறத் தீண்டி

யார்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துக் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றிவேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து