பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

109

பெருமாளுக்குப் பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டிலே பல இடங்களில் கோவில்கள் இருந்தன. ஆமை, மீன், பன்றி, நரசிங்கம் முதலிய திருமாலின் அவதாரங்களில் ஆமைக்கும் மீனுக்கும் தனியே கோயில்கள் கிடையா. நரசிங்க மூர்த்திக்குப் பிற்காலத்திலே கோயில்கள் தனியாக ஏற்பட்டன. ஆனால், நரசிங்கமூர்த்திக்குக் கோயில் உண்டாவதற்கு முன்னரே, மிகப் பழைய காலத்திலேயே வராகப் பெருமாளுக்குக் கோயில்கள் ஏற்பட்டிருந்தன.

திருமால் அடியாரான ஆழ்வார்களும், திருமால் திருவவ தாரங்கள் எல்லாவற்றையும் போற்றுகிறார்களானாலும், வராகப் பெருமாளைச் சிறப்பாகப் போற்றியிருக்கிறார்கள்.

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலே வராகப் பெருமாளின் திருவுருவங்கள் மாமல்லபுரத்துக் குகைக் கோயில்களிலே புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டன. அவை, வராக மண்டபம் என்று வழங்கப்படுகிற குகைக்கோயிலின் சுவரில் உள்ள சிற்பமும், வராகப் பெருமாள் குகைக் கோயிலில் உள்ள சிற்பமும் ஆகும்.

வராக மண்டபத்தில் பாறைச் சுவரில் உள்ள புடைப்புச் சிற்பம் வெகு அழகானது. இதில், வராகப் பெருமாள் இடது காலை ஊன்றி வலது காலை மடக்கித் தூக்கியிருக்கிறார். அவரது தூக்கிய பாதம் நாக அரசனின் தலைமேல் வைக்கப்பட்டிருக்கிறது. நாகராசன் மனைவி கைகூப்பி வணங்குகிறார். நாகராசனும் அவன் மனைவியும் தலைக்கு மேல் பாம்பின் உருவம் உடையவர்களாய் உள்ளனர். அவர்களின் இடுப்புக்குக் கீழே தண்ணீர் இருக்கிறது. வராகப்பெருமாளின் மடக்கிய காலின் தொடையின் மேலே, நீரிலிருந்து எடுத்த நிலமகளை உட்கார வைத்திருக்கிறார். தொடையின் மேல் அமர்ந்த நிலமகள் கரண்டக மகுடம் தலையில் அணிந்து, காதில் பத்திர குண்டலங்கள் விளங்க, அழகிய தோற்றத்தோடு காணப்படுகிறார். க தொடைமேல்

அமர்ந்திருக்கும் நிலமகளின் (பூதேவின்) கால்களை வராகப் பெருமாள் இடது கைகளால் பிடித்துக்கொண்டு வலது கையினால் அவர் முதுகைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். வராகப் பெருமாளின் மற்ற இரண்டு கைகளில் சங்கு சக்கரங்கள் இருக்கின்றன. வராகப் பெருமாளின் திருமுகம் காட்டுப் பன்றியின் உருவமாக அமைந்து ஒற்றை மருப்புடன் காணப்படுகிறது. தலையில் கிரீடமகுடம் விளங்குகிறது. நீரிலே அழுந்திக் கிடந்த நிலமகளைத் திருமால், வராகப்