பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஏந்திக்கொண்டு ஒரு கையைத் தலைக்குமேல் தூக்கி ஆகாயத்தைத் தாங்குவது போலக் காணப்படுகிறார். இடது பக்கத்து நான்குகைகளில், ஒரு கையில் வில்லை ஏந்தி மார்போடு சேர்த்து வைத்திருக்கிறார். மற்றக் கைகளில் கேடயமும் சங்கும் ஏந்தியிருக்கிறார். ஒரு கையை நீட்டி அந்தத் திசையை இரண்டு விரல்களினால் சுட்டிக் காட்டுகிறார்.

நிலங்கடந்த நெடுமுடி யண்ணலாகிய இவரின் தோற்றம் கம்பீரத்துடன் காணப்படுகிறது. இவருக்கு வலப் பக்கத்தின் மேல் புறத்தில், நாய்த் தலையுடைய ஒரு ஆள் அந்தரத்தில் நிற்பதுபோல இருக்கிறான். இது எதைக் குறிக்கிறது என்பது தெரியவில்லை. இவ் வுருவத்துக்குப் பக்கத்தில் பிரமன் தாமரைப் பூவில் அமர்ந்து இருக்கிறார். வலது பக்கத்தின் மேல்புறத்தில் ஒரு தேவன் உட்கார்ந் திருக்கிறான். திருமாலின் தோளுக்குக் கீழே, வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் சூரிய சந்திரர்கள் ஆகாயத்தில் நின்ற வண்ணமாகத் தமது கைகளினாலே திருமாலைச் சுட்டிக் காட்டுகிறார்கள். சந்திரனுக்குப் பக்கத்தில், ஒரு ஆள் கையில் கட்டாரி ஏந்திக் குனிந்த வண்ணம் ஆகாயத்தில் பறப்பது போலக் காணப்படுகிறான்.

திருமாலின் காலடியில் தரையிலே பக்கத்துக்கு இரண்டு பேராக நான்கு ஆட்கள் தலையில் மகுடம் அணிந்து உட்கார்ந் திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பலிச்சக்கரவர்த்தி; ஒருவர் சுக்கிராசாரியார். மற்ற இருவரும் அமைச்சரும் சேனாபதியும் போலும். கம்பீரமாகவும் மிடுக்காகவும் உள்ள இந்தச் சிற்ப உருவம். பலிச்சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனன் (குள்ளன்) உருவமாகச் சென்று மூன்றடி மண் கேட்டுப் பெற்று, திரிவிக்கிரம மூர்த்தியாக ஒங்கி வளர்ந்து நிலமளந்த கதையைத் தெரிவிக்கிறது.

"பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடு திருமா நீள்கழல் ஏழுலகும் தொழ

ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கருமாணிக்கம் எண்கண் ணுளதாகுமே’'

என்று நம்மாழ்வாரும்,

“கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்

களவின்மிகு சிறுகுறளாய் மூவடியென்று இரந்திட்டு அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளு மெல்லாம்