பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

115

நின்ற கோலமாகக் காணப்படுகிற இவ்வுருவம், நான்கு கைகளை யுடையது. வலது மேல்கையில் வட்டமான ஒரு பொருளை (கிண்டி?) ஏந்தி, இடது மேல்கையில் உருத்தி ராக்கமாலை பிடித்திருக்கிறார். வலது கீழ்க்கை அபயமுத்திரை காட்ட, இடது கீழ்க்கை இடுப்பில் ஊன்றியிருக்கிறது.

பிரமனுக்கு இருபக்கத்திலும், காலடியில், இரண்டு பேர் மண்டியிட்டு அமர்ந்து கையைத் தூக்கி பிரமனைக் காட்டிய வண்ணம் தோத்திரம் செய்கிறார்கள். இவர்களுக்குமேலே, குறள் உருவமுள்ள இரண்டு பூதகணங்கள் ஆகாயத்தில் நின்று கையை உயர்த்திக்காட்டித் தோத்திரம் செய்கின்றன.

18. சிவன் : பிரமன் கோயிலுக்கு அடுத்து நடுக்கோயிலாக அமைத்திருப்பது சிவபெருமான்கோயில். இக்கோயில் மற்ற இரண்டு கோயில்களைவிடச் சற்று முன் வளர்ந்திருப்பதனால், சிவபெரு மானுக்கு முதன்மையளிக்கிறது. இந்தக் கோயிலுக்குள் செல்ல படிகள் உள்ளன. வாயிலில் துவார பாலகர் உருவங்கள் உள்ளன. கருவறைச் சுவரில்

உருவம்

புடைப்புச் சிற்பமாகச் சிவபெருமான் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்குள்ள நான்கு கைகளில், மேல் வலது வகையில் பரசு (கோடரி) தாங்கி, மேல் இடது கையில் ஜபமாலை ஏந்தியிருக்கிறார். கீழ் வலது கையை அபய முத்திரையாகவும் கீழ் இடது கையை இடுப்பில் ஊன்றியும் இருக்கிறார்.

சிவபெருமானுக்கு இருபுறத்திலும் காலடியில் இரண்டு பேர் மண்டியிட் டமர்ந்திருக்கிறார்கள். சிவனுக்கு வலது புறத்திலுள்ளவர் இடது கையைத் தொடையில் ஊன்றி வலது கையை மார்பில் வைத்துத் தியானத்தில் இருக்கிறார். இடதுபக்கத்தில் இருப்பவர் இரண்டு கையையும் சேர்த்துக் கூப்பி மார்பில் வைத்துக்கொண்டு தியானிக்கிறார்.

இவர்களுக்குமேலே, குறள் உருவம் உள்ள இரண்டு பூதகணங்கள், ஆகாயத்தில் நின்று சிவவெருமானைச் சுட்டிக் காட்டித் தோத்திரம் செய்கிறார்கள்.

19. திருமால் : இக் கோயிலுக்கு இடதுபக்கத்தில் இருப்பது, திருமால் கோயில். இக் கோயில் வாயிலிலும் துவார பாலகர் உள்ளனர். கருவறைக்குள்ளே சுவரில் புடைப்புச் சிற்பமாக நிற்கும் திருமால்,