பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

119

கோட்டத்துச் சிற்பங்கள் அழிக்கப்பட்டதும் பிற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகும். யாரால் எப்போது ஏன் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதற்கு அடுத்த கோட்டத்தில் துவார பாலகரின் உருவச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

22. இந்திரன். இனி, இதை யடுத்துள்ள கிழக்குப் புறச் சுவருக்குப் போவோம். இந்தச் சுவரிலும் ஐந்து கோட்டம் வகுக்கப் பட்டு ஒவ்வொரு கோட்டத்திலும் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ள. இந்தச் சிற்பங்களில் நடுநாயகமாக இருப்பது யானைமேல் அமர்ந்துள்ள இந்திரன் உருவம். இந்திரன் தன் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானையின் யானையின் மேல் அமர்ந்திருக்கிறான். சிற்பத்தில் யானையின் முன்பக்கம் மட்டும் தெரிகிறது. முன் கால்கள் இரண்டும் நீண்டு தொங்கும் தும்பிக்கையும் தலையும் முகமும் அகன்ற காது களும் தெரிகின்றன. யானை நிற்கும் இயற்கைத் தோற்றம் நமக்கு எதிரில் காணப்படுகிறது. யானையின் கழுத்தின் மேல், இந்திரன் தலையில் மகுடம் அணிந்து காதுகளில் குழை விளங்க அமர்ந்தி ருக்கிறான்.

23. முனிவர் : இந்திரனுக்கு இடதுபுறக் கோட்டத்தில், தலையில் சடா முடியும் முகத்தில் தாடி மீசைகளும் உள்ள ஒரு முனிவர் நிற்பது போலச் சிற்பம் அமைந்திருக்கிறது. முனிவர் தனது வலது தோளின் மேல் எதையோ (வீணை?) வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த முனிவர் நாரதராக இருக்கக் கூடும். இவர் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.

24. துவாரபாலகன்: இதற்கு அடுத்த கோட்டத்தில் துவார பாலகன் உருவம் காணப்படுகிறது. இவன் இடது கையைத் தொடை மேல் வைத்து வலது கைவிரலால் முனிவரையும் இந்திரனையும் சுட்டிக் காட்டுகிறான்.

25. இராணிகள் : இந்திரனுக்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இரண்டு இராணிகளின் உருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதில், இராணி ஒருத்தி தலையில் மகுடம் தரித்து வலது காதில் பருத்த குழையையும் இடது காதில் கனமான குண்டலத்தையும் அணிந்திருக் கிறாள். கழுத்தில் அணிந்த மணிமாலைகள் மார்பில் தொங்குகின்றன. வலது கையை இடுப்பில் ஊன்றி இடது கையை மடக்கித் தோளின்