பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மேல் வைத்து, இடது புறமாகச் சிறிது தலைசாய்த்து எழில்பெற நிற்கிறாள். இவள் இந்திரன் மனைவியான இந்திராணி போலும். இந்த அரசியின் பக்கத்தில் நின்று தனது இடது கையினால் இராணியின் வலது தோளைப் பிடித்துக் கொண்டு இன்னொருத்தி நிற்கிறாள். இவளும் தலையில் மகுடம் அணிந்து காதுகளில் பருத்த குழைகள் தொங்க எழிலுடன் நிற்கிறாள். இவள் அரசியின் தோழியோ?

இதற்கு அடுத்த கோட்டத்தில் உள்ளது துவார பாலகன் உருவம். டது கையினால் வாயில் நிலையைப் பிடித்துக் கொண்டு வலது கையை இடுப்பில் ஊன்றிக்கொண்டு நிற்கிறான்.

26. இடபாரூடர் : இனி, தெற்குப்புறச் சுவருக்கு வருவோம். இங்குள்ள ஐந்து கோட்டங்களில் நடுவில் உள்ள கோட்டத்தில் இடபாரூட மூர்த்தம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், சிவபெருமான் எருதின் கழுத்தின் மேல் வலது கையை யூன்றி, முசுப்பின் மேல் சாய்ந்து நிற்கிறார். இடது கை அபயங்காட்டுகிறது. மற்ற இரண்டு கைகளில் ஏதோ (மான்மழு?) ஏந்தியிருக்கிறார். காலைக் கத்திரிபோலக் குறுக்காக வைத்து, சடாமகுடமணிந்த தலையைச் சற்றுச் சாய்த்து நிற்கும் இவர் அமைப்பு எழிலாக விளங்குகிறது. இவரைத் தாங்கி நிற்கும் காளை எருது இளமையுடையது என்பதை இதன் கொம்புகள் தெரிவிக்கின்றன. இதன் முன்கால்களும் கழுத்தும் முகமும் சிற்பத்தில் காணப்படுகின்றன. மற்றப் பகுதிகள் மறைந்துள்ளன.

27. அரசனும் அரசியும் : இடபாரூட மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் அரசனும் அரசியும் நின்றிருப்பதுபோன்ற சிற்பம் அமைந்திருக்கிறது. அரசன் தன் கையினால் இடபாரூட மூர்த்தியைச் சுட்டிக்காட்டுகிறான். இவர்களின் உருவ அமைப்பு கண்ணையும் மனத்தையும் கவரும் மாண்புடையது. மன்னர் குலத்துப் பெருமிதம் இவர்களின் முகத்தில் நன்கு புலப்படுகிறது. இவை பல்லவ அரசன் அரசியின் தோற்றத்தையுடையன.

28. துவாரபாலகர் இதற்கு அடுத்த கோட்டத்தில் உள்ளது துவார பாலகரின் உருவம். இவன் வலது கையை இடுப்பில் ஊன்றி நின்று, இடது கை விரலினால் அரசன் அரசியரையும் இடபாரூட மூர்த்தியையும் சுட்டிக் காட்டுகிறான்.

29. அரசன் அரசியர் : இடபாரூட மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் இன்னொரு அரசன் அரசியர் நிற்பதுபோன்ற சிற்பம்