பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

123

36. சிவபெருமான் : தெற்குப் பக்கத்து இருகோடிகளிலும் உள்ளவை : - சிழக்குக் கோடி: சிவபெருமான. நின்ற கோலம். வலதுகை அபய முத்திரை; இடதுகை இடுப்பில் ஊன்றியுள்ளது. மற்றொரு வலது கையில் மழுவும் இடதுகையில் மானும் (?) இருக்கின்றன. காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தோள்களின் மேல் தாழ்ந்துள்ளன.

37. நரசிம்மவர்மன் : மேற்குக்கோடி : அரசன் உருவம்; நின்ற கோலம். மாமல்லன் நரசிம்மவர்மனுடைய உருவம் என்று கருதப்படுகிறது. கழுத்தில் மணிமாலைகள். தலையில் உயர்ந்து நீண்ட கிரீடம். இரண்டு கைகள். வலது கையைத் தொங்கவிட்டு இடதுகையை இடுப்பில் வைத்திருக்கிறது. இந்த உருவத்தைப் பற்றி 10-ஆம் பக்கத்தில் கூறியுள்ளேன்.

இரண்டாவது நிலை

இனி, இந்த மாடக்கோயிலின் இரண்டாவது நிலைக்குச் செல்வோம். மேலே ஏறிச் செல்லப் படிகள் இல்லை. ஆனால், ஆர்க்கியாலஜி இலாகா மரப்படிகளை அமைத்திருக்கிறது. இப்படிகளை ஏறி இரண்டாவது மாடியை யடைவோம். முதலில் திருவுண்ணாழிகையாகிய கருவறைக்குச் செல்வோம்.

கருவறை

இரண்டாவது மாடியில் மேற்குப்பார்த்த திருவுண்ணாழிகை (கருவறை) சிறியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் சிவலிங்கம் இல்லை. கருவறைச் சுவரில் சோமஸ்கந்த மூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறைக்கு வெளியே துவார பாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடதுபுறத்து உருவம் சரியாக அமையவில்லை. வலதுபுறத்து உருவம் நன்கு அமைந்திருக்கிறது. கருவறைக்கு வெளியே சிறிய அர்த்த மண்டபம் இருக்கிறது. இந்தக் கருவறையை வலமாகச் சுற்றி வருவதற்கு, ஒருவர்மட்டும் போகக்கூடிய குறுகிய இடம் இருக்கிறது.

திருவுண்ணாழிகையைச் சுற்றிலும் வெளிப்பக்கத்தில் பல சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைச் சுற்றி வலம்வருவோர், மிகக் குறுகிய வழியாக வரவேண்டியிருப்பதால், இங்குள்ள சிற்ப உருவங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பது இல்லை. பார்ப்பார்களானால்,