பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இருபத்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று மகாபலிபுரம் பல்வேறு காரணங்களுக்காக அதிக முக்கியத்துவம் அடைந்துள்ளது. இந்நிலையில் புடைப்புச் சிற்பம் பற்றிய உண்மை விளக்கம் வெளிவருவது ஏற்புடையது என தமிழ்நாடு ஜைன சங்கம் விரும்பியது. இவ்விருப்பத்தினை ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் அன்புடன் மறுபதிப்பிற்கு இசைவு தந்தார்கள். எல்லாவித

எதிர்ப்புகளுக்கிடையில்

உண்மையினை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ள மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நடுநிலைமை பிறழா ஆய்வுத்திறனைப் போற்றி நன்றிகலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் நிதிநிலைமையினை விளக்கிய பொழுது மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தன்னலம் கருதாது எவ்வித ஊதியமும் பெறாமல் தமிழ்நாடு ஜைன சங்கத்திற்கு வெளியிடும் உரிமை யினைத் தந்துள்ளார்கள்.

மகாபலிபுரத்துச் சிற்பக் காட்சியின் உண்மை விளக்கம் வெளிவர வேண்டும் என்ற உயரிய நோக்கோடு விளங்கும் அவருக்கு ஜைன சமயத்தினர் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். இவர் “சமணமும் தமிழும்” எனும் நூலினையும் எழுதி ஜைன சமயத்தின் தொண்டினை விளக்கியுள்ளார்கள். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் தன்னலமற்ற பணிக்கு தமிழ்நாடு ஜைன சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த ஸ்ரீமதி அச்சகத் தினருக்கு எங்கள் நன்றி.

தமிழகத்து ஜைனப் பெருமக்களும் ஆராய்ச்சித் துறையினரும் மற்றும் வரலாற்று அன்பர்களும் பிறரும் இந்நூலினைப் பெற்று கற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை

4-4-1974

தமிழ்நாடு ஜைன சங்கம்

சென்னை