பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

நின்று கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தித் தவம் செய்கிற உருவம் அர்ச்சுனன் என்றும், அதற்கு எதிரில் நான்கு கைகளுடன் நிற்கும் தெய்வம் சிவபெருமான் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் சொல்வதை ஒப்புக் கொண்டால், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற மற்ற உருவங்கள் எதைக் குறிக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாக குமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள், கங்கை ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள், மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன? மேலும், தபசு செய்கிற அர்ச்சுனனிடத்திற்குச் சிவபெருமான், வேடன் உருவங் கொண்டு போனார் என்றும் உமையம்மையார் வேடுவச்சி உருவம் எடுத்து உடன் சென்றார் என்றும் புராணம் கூறுகிறது. வேடன் வேடுவச்சி உருவங்கள் இதில் காணப்படவில்லை. ஆனால் கதைக்குத் தொடர்பு இல்லாத அநாவசியமான உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அன்றியும் இந்தியச் சிற்ப முறைப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைத் தலைவர்களான அர்ச்சுனைனையும் சிவபெருமானையும் பெரிய உருவமாக அமைத்து, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மற்ற உருவங்களைச் சிறிய உருவமாக அமைத்திருக்கவேண்டும். இந்தச் சிற்பத்தில் அப்படி அமைக்கப்படவில்லை. நாகர்கள், தெய்வ கணங்கள், யானை, கோயில் தலையற்ற உருவங்கள் முதலியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும் போது, இந்தச் சிற்பக்காட்சி, அர்ச்சுனன் தபசைக் குறிப்பதல்ல என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறது என்றும் கருத வேண்டியிருக்கிறது.

இனி, மற்றொரு சாரார் கருதுகிறபடி இந்தச் சிற்பக் காட்சி பகீரதன் தபசைக் குறிக்கிறதா என்று பார்ப்போம். M. Victor Goloubeaw அவர்கள் கருதுகிறபடி, இச் சிற்பத்தின் நடுவில் காணப்படுகிற, கங்கை ஆறு இழிந்து ஒடுவது போன்ற காட்சி, முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கங்கையில் நாக அரசனும் அவன் மனைவியும் ஏன் காணப்படுகிறார்கள்? மேலும் அவர் கூறுவதுபோல, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிற உருவம் பகீரதனைக் குறிக்கிறது என்று ஒப்புக் கொள்வோமானால், அவனுக்கு எதிரில் நான்கு கைகளுடன் காணப்படுகிற உருவத்தைச் சிவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், இந்த உருவத்துக்குத் தலையில் கிரீட