பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சிறந்ததோர் திருக்கோயில் அமைத்திருந்தார். இத்திருக்கோயிலுக்கு எதிரில், ரிஷப தீர்த்தங்கராரின் உபதேசங்களைச் செவிசாய்த்துக் கேட்பது போன்று தன்னுடைய (பரதச் சக்கரவர்த்தியுடைய) உருவத்தையும் அவர் அமைத்திருந்தார்.)

கயிலாயமலைக்கு வந்த சகரகுமாரர்கள், பரத சக்கரவர்த்தி கட்டிய இக்கோயிலுக்குள் சென்று வணங்கினார்கள். பிறகு, மிக்க அழகுள்ளதும் விலை மதிக்கப்படாததுமான இப் பொற் கோயிலைப் பாதுகாக்காவிட்டால், வரப்போகிற துஷ்மயுகத்தில் மக்கள் இக்கோயிலி லுள்ள இரத்தினங்களையும் பொன்னையும் கொள்ளையடிப்பார்கள் என்று நினைத்து, அக் கோயிலுக்குப் பாதுகாப்பு அமைக்க முயன் றார்கள். கோயிலைச் சுற்றிலும் அகழிதோண்டி அதில் நீரை நிரப்பி விட்டால் ஒருவரும் கோயிலுக்குள் சென்று கொள்ளையிடமுடியாது என்று கருதினார்கள். கருதினபடியே, தம்மிடம் இருந்த அஜீவரத்தினங் களில் ஒன்றான, தண்ட ரத்தினத்தினால் கோயிலைச் சுற்றிலும் அகழி தோண்டினார்கள். ஆற்றல் மிக்க அந்த தண்ட ரத்தினம் ஆயிரம் யோசனை ஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. அதைக்கண்ட நாகர்கள் அஞ்சினார்கள். ஜுவலனப் பிரபன் என்னும் நாகராசன் அவ்வகழியின் வழியாகப் பூலோகத்துக்கு வந்து கடுங்கோபத்துடன் சகர குமாரர் களைப்பார்த்து, “பவன லோத்தை ஏன் அழிக்கிறீர்கள். அஜிதநாத சுவாமியின் தம்பியாகிய சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகளாகிய நீங்கள் இத்தகாத செயலை ஏன் செய்கிறீர்கள்?” என்று வினவினான்.

66

நாகராசன் கோபத்தோடு வினவியத்தைக் கேட்ட, சாகரில் மூத்தவனான ஜானு. “உமது நாகலோத்தை அழிக்க நாங்கள் நினைக்கவில்லை. ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைச் சூழ்ந்து அகழி தோண்டினோம். தண்டரத்தினத்தின் ஆற்றலினால், அகழி நாகலோகம் வரையில் ஆழமாக அகழப்பட்டது. இனி உங்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி பார்த்துக் கொள்கிறோம்” என்று விடையளித்தான். நாகராசன் கோபம் தணிந்து, 'எங்களுக்குத் தொந்தரவு கொடுக் காதீர்கள்' என்று கூறி, நாகலோகம் போயி விட்டான்.

பிறகு சகர குமாரர்கள், தம்மிடமிருந்த தண்ட ரத்தினத்தின் உதவியினால், கங்கையின் நீரைத் திருப்பிக் கொண்டு வந்து தாங்கள் தோண்டிய அகழியில் பாய்ச்சினார்கள். கடல் நீர் பெருக்கெடுத்தது