பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

தப்பாமை யடைத்துவைத்து அவை தகைபெறமுன் வழங்குதலும் கண்டார்க்கே யருளுடைமையும் கனவிலும்பொய் யுரையாத பண்டாரியாய்ச் சிறந்த பரிசமைந்த இரத்தினமும், நிகழ்ந்ததுவும் போனதுவும் வருவதுவும் மனவேகம் புகழ்ந்துரைக்கும் நிமித்திகனாம் பொய்தீர்ந்த இரத்தினமும், அஜீவ இரத்தினம் ஏழு.

துன்னிருளை அறத்துறக்கும் சூரிய சந்திரர் போல

மின்னொளியால் மனம் வேண்டும் வெளியெல்லாம் வரவிரிக்கும் மன்னியகா கணியென்னும் மாண்பமைந்த இரத்தினமும் வேந்தனது பணியாலே விரிதிரை சூழ் மேதினியில் காய்ந்தவரை உயிர்செகுக்கும் கதிராழி இரத்தினமும், நரபதிதன் பணியென்று நாற்பத்தெண் காதம் வளர் திரைபோல்நீர் மேல்விரியும் சரும மகா இரத்தினமும், நஞ்சினொடு மாயங்கள் நணுகாமல் காக்க வல்ல எஞ்சலில் திகழ் சூளா மணி என்னும் இரத்தினமும், மேடுகளும் வரையிடங்களும் விழு குழியும் வியத்தக்க காடுகளும் நிரவ வல்ல கடுந்தண்டா ரத்தினமும், கன்மழையும் கார்மழையும் கனன்மழையும் மாயத்தால் மன்னவரும் வானவரும் பொழிந்தாலும் வழிந்தோட விடை நின்ற தந்திரத்தால் எய்தாமை காத்துய்க்கும் குடை என்னும் பெயருடைய கொள்கைமிக்க இரத்தினமும், குழுவாகிய கம்பலையும் குதிரைகளும் கொடி படையும் வழுவாமல் கொல்லவல்ல வாள் என்னும் இரத்தினமும்,

இத் தன்மைத்தாகிய ஈரேழிரத்தினமும் முன்னுரைத்த தன்மை நவநிதியும் அமைவுற உடையனாகிய சக்கரவர்த்தி சகராஜன் என்பவனுக்கு ஸ்ரீ இன்னும் எவ்வகைத்தோ எனின்,

திருவுருவும் திட்பமும் திறலுடைமைத் தேவர் மருவி யுடன்காத்தல் காட்சி - முருகுடைய

தார்வேந்தர் எல்லாந் தனக்குநேர் இன்மையால் ஆர் வேந்தர் ஒப்பார் அவற்கு !