பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

அப்பிரிவுகளைத் தூண்கள் கூடுகள் முதலிய அமைப்புகளிலிருந்து கண்டு கொள்ளலாம். நாம் இங்கு ஆராயப்புகுவது எல்லாம் தமிழ் நாட்டுக் கோயில்களைப்பற்றிய பொதுவான அமைப்புப்பற்றிய மேல் போக்கான செய்திகளையே யாகும்.

கோயில்களின் தரையமைப்பு

பொதுவாகப் பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் எப்போதும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியிருக்கும். சிலகோயில்கள் தெற்கு நோக்கியும் இருப்பதுண்டு. பொதுவாகக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே கோயில்களை அமைப்பது வழக்கம்.

கோயில் கட்டிடத்தின் தரையமைப்பு, கருவறையை (கருப்பக் கிருகத்தை)யும் அதன் முன்புறத்தில் சிறு மண்டபத்தையும் உடையது. கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபத்திற்கு அர்த்த மண்டபம் என்பது பெயர். கருவறை (கருப்பக் கிருகம்) பெரும்பாலும் சதுரமான அமைப்புடையது. சில கருவறைகள் நீண்ட சதுரமாக இருப்பதும் உண்டு. சில கருவறைகள் நீண்ட அரை வட்டமாக அமைந்திருக்கும். மிகச் சில வட்ட வடிவமாக இருக்கும்.

காஞ்சீபுரத்துக் கயிலாச நாதர் கோயிலிலும், பனமலைக் கோயிலிலும், கருவறையைச் சார்ந்து வேறு சில கருவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் விதிவிலக்காக, அபூர்வமாக

ஏற்பட்டவை.

பல்லவ அரசர் காலம் வரையில், கருவறையும் அர்த்த மண்டபமும் ஆகிய கட்டிடங்களே அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் அமைக்கப்படவில்லை.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்தனர். அன்றியும் அர்த்த மண்டபத்துக்கு முன்பு, இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு கோயிலைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்தபடியினாலே அம் மண்டபங்கள், மத்திய கோயிலின் பார்வையையும் அழகையும் மறைத்துவிட்டன. சில