பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

179

மாடிக்குப் படிகள் இல்லை. பண்டைக் காலத்தில் மரப் படிகள் அமைந்திருந்தன போலும். இப்போது மரப்படிகளும் இல்லை. இது மூன்று நிலை மாடக்கோயில் ஆகும்.

உத்தரமேரூர் மாடக் கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்மன் பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி. 717 முதல் 779 வரையில் அரசாண்டான். எனவே, இக்கோயில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலைக் கட்டிய பல்லவனுடை உருவச் சிற்பமும் இக் கோயிலில் இருக்கிறது.

கோயில்

கோயில் அமைப்பும் உறுப்புகளும்.

கட்டிட கட்டிட

அமைப்பைப் பற்றியும் அவற்றின் உறுப்புக்களைப் பற்றியும் ஆகம நூல்களிலும் சிற்ப சாஸ்திரங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கட்டிடக் கலையின் பொதுவான செய்திகளை மேலோட்டமாகக் கூறுகிறபடியால், அவற்றைப்பற்றிய விரிவான செய்திகளை இங்குக் கூறவில்லை. முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

கோயில் கட்டிடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு. அவையாவன:-

1. அடி 2. உடல் 3. தோள். 4. கழுத்து, 5. தலை 6. முடி

இந்தப் பெயர்களுக்குச் சிற்ப நூலில் வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. அப் பெயர்களாவன:- 1. அதிஷ்டானம், 2, பாரம், 3. மஞ்சம், 4, கண்டம், 5. பண்டிகை, 6. ஸ்தூபி. இவற்றை விளக்குவோம்.

1. அடி அல்லது தரைஅமைப்பு. இதற்கு அதிஷ்டானம் மசூரகம், ஆதாரம், தலம், பூமி முதலிய பெயர்கள் உண்டு.

2. உடல் அல்லது கருவறை, இதற்குக் கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் முதலிய பெயர்கள் சிற்ப நூலில் கூறப்படுகின்றன: இப் பெயர்கள் கருவறையின் சுவர்களைக் குறிக்கின்றன.8

3. தோள் அல்லது தளவரிசை. இதற்குப் பிரஸ்தரம். மஞ்சம், கபோதம் முதலிய பெயர்கள் உள்ளன.

4. கழுத்து. இதற்குக் கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள் உண்டு.