பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

சிலவற்றில்

தூண்களின் மேலேயுள்ள போதிகை, அரைவட்டமாக வளைந்தும் சிலவற்றில் வளைவில்லாமலும் இருக்கும்.

த குகைச்கேசலில்

இசை அமைப்பைச் சு

செர்மன்

னில் காணப்ப இதிய அமைப்பு.

துவார பாலகர். மகேந்திரவர்மன் காலத்துக் குக்ை கோயிலில் உள்ள துவாரபாலகர் உருவங்கள் எல்லாம் எதிர்பார்வையாக (எதிர்நோக்கி நிற்பதுபோல) அமைந்துள்ளன. பக்கவாட்டமாகத் திரும்பியிரா. இவை பெரிய பளுவான தண்டாயுதத்தைத் தரையில் ஊன்றி அதன்மேல் கைகளைத் தாங்கி நிற்கும். சில குகைக் கோயில்களின் துவாரபாலகர் கையைத் தலைக்குமேல் உயர்த் தியிருப்பது போல அமைந்திருக்கும். சில துவாரபாலகரின் தலையில் மாட்டுக் கொம்புகளை அணிந்திருப்பது போல இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்கள் இரண்டு கைகளை மட்டும் உடையவர்கள்.சில துவாரபாலகர் ஒரு காலை யூன்றி மற்றொரு காலைக் குறுக்காக மடக்கி நிற்பர்.'