பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்த அமைப்புகளைக் கொண்டு மகேந்திரவர்மன் காலத்துக் குகைக் கோயில்களை நன்கு அறியலாம்.

மகேந்திரவர்மன் திருமாலுக்கு மூன்றும், சிவ பெருமானுக்கு ஆறும், மும்மூர்த்திக்கு இரண்டும், பஞ்ச மூர்த்திக்கு இரண்டும், கொற்றவைக்கு (துர்க்கை) ஒன்றும், அருகக் கடவுளுக்கு ஒன்றும், ஏழு மூர்த்திகளுக்கு(?) ஒன்றும் ஆகப் பதினேழு குகைக் கோயில்களை அமைத்தான். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயில்

திருச்சிராப்பள்ளி மலையில் இரண்டு குகைகோயில்கள் உள்ளன. இவ்விரண்டில், மேலே இருப்பது மகேந்திர வர்மன் அமைத்த குகைக்கோயில் ஆகும். கீழே இருப்பது மகேந்திரவர்மன் மகன் மாமல்லன் அமைத்த குகைக்கோயில். இங்குக் கூறப்படுவது மேல் குகையாகும். பல்லவ அரச குடும்பத்தினர் வாழ்ந்த பல்லாவரம் என்னும் பெயருள்ள மூன்று ஊர்களில் அமைந்துள்ள குகைக் கோயில்களில் இது ஒன்று. திருச்சிக்கு அருகே “பல்லாபுரம்” என்னும் ஊர் உளது. பல்லாபுரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு.

இக் குகைக்கோயில் தெற்குப் பார்த்தது. வழக்கம் போல முன்மண்டபமும் அதற்குள் கருப்பக்கிருகமும் அமைந்துள்ளன. மண்டபம் முப்பது அடி நீளமும், பதினைந்து அடி அகலமும்,

TEL

திருச்சிராப்பள்ளிக் குகைக் கோயிலின் தரையமைப்பு