பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

66

விபக்ஷ

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஒழுக்கத்தைவிட்டுத் திரும்பி இலிங்கத்தை வழிபடுகின்ற குணபரன் என்னும் அரசன் இந்த லிங்கமாகிய உலகத்தில் நெடுங்காலம் வாழ்வானாக.

66

995

"சோழநாட்டின் முடிபோல விளங்குகிறது இந்த மலை. முடியில் அமைந்த மணிபோன்று இருக்கிறது இந்தக் (குகைக்) கோயில். மணியின் ஒளிபோன்று பிரகாசிக்கிறது சங்கரனுடைய (அருள்) ஒளி.” ‘சத்திய சந்தனுடைய பருவுடம்பு கல்லில் செதுக்கியமைக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து அழியாப் புகழுடம்பு தோன்றியுள்ளது.

66

இக்குகையின் வலப்புறத் தூண் ஒன்றில் வடமொழிச்சாசனம் எழுதப்பட்டுள்ளது. நான்கு செய்யுட்களாக அமைந்துள்ளது இந்தச் சாசனம். இச் சாசனத்தின் கருத்து இது:

6

7

"மலைகளில் சிறந்ததான இந்த மலையின் உச்சியிலே, வியக்கத்தக்க இந்தக் கற்கோயிலிலே, குணபரன் என்னும் அரசன் கல்லினால் திருமேனி அமைத்து ஸ்தானுவை ஸ்தானுவாக்கி அவனுடன் தன்னையும் உலகத்திலே அழியாப் பொருளாக்கிக் கொண்டான்.'

998

“கிரீசன் (மலையில் வாழ்பவன்) என்னும் ம் பெயரை மெய்ப்பிக்கும் பொருட்டு மலைமகள் கணவனாகிய கிரீசனுக்கு (சிவனுக்கு) சத்துருமல்லன் என்னும் மன்னன் இந்த மலைமேலே ஒரு கோயிலை அமைத்தான்.’

وو

"தரையிலே அமைக்கப்பட்ட கோயிலிலே இருந்து கொண்டு சோழர். காவிரி இவர்களின் பேராற்றலை நான் எவ்வாறு காண முடியும் என்று அரன் (சிவன்) கேட்ட படியினாலே, தன்னுடைய நீதியான ஆட்சியினாலே மநுவை ஒத்த குணபர மன்னன், மேகங்கள் தவழ்கின்ற இந்த மலைக்கோயிலைச் சிவனுக்கு அமைத்துக் கொடுத்தான்.

66

"தன் உள்ளத்திலே சிவபெருமானை எப்போதும் நிலை நிறுத்தியுள்ள புருஷோத்தமன் இந்த மலையிலே அரனுக்கு ஒப்பற்ற திருமேனியைக் கல்லினால் விருப்பத்தோடு அமைத்து மேன்மையான இந்த மலையை அழகுபடுத்தினான்.”