பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

207

இக் குகையின் உட்புறத் தூண்களின் மேல் உள்ள தூலத்தில் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சாசனம் ஒரு செய்யுள் வடிவாக அமைந்திருக்கிறது. அதன் கருத்து இது:

9

"லலிதாங்குரன் என்னும் பல்லவ மன்னனால் அமைக்கப் பட்ட லலிதாங்குர பல்லவேஸ்வரக் கிருகம்.

மேலே கண்ட சாசனங்களிலே குணபரன், சத்துருமல்லன், புருஷோத்தமன், லலிதாங்குரன் என்னும் பெயர்கள் கூறப்படு கின்றன. ப் பெயர்கள் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் ஆகும்.

சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரத்துக் குகைக் கோயிலில் காணப்படுவது போலவே இந்தக் குகைக் கோயிலிலும், தூண்களிலும் தூலங்களிலும் பல்லவக் கிரந்த எழுத்துக்களினால் எழுதப்பட்ட மகேந்திரவர்மனுடைய சிறப்புப்பெயர்கள் காணப்படுகின்றன. இப் பெயர்களில் ஸ்ரீ மகேந்திரவிக்ரமன், குணபரன், பிபிணக்கு, சித்திரகாரப்புலி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களைத் தென் இந்தியச் சாசனம் தொகுதியில்" காண்க.

2. பல்லாவரத்துக் குகைக்கோயில்

பன்னிரண்டாம்

இது, செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை தாலுகா பல்லாவரம் என்னும் ஊருக்கு அருகில் இருக்கிறது. பல்லாவரம், தென் இந்திய இருப்புப்பாதையில் ஒரு இரயில் நிலையம். சென்னையில் இருந்து பஸ் வண்டியிலும் செல்லலாம். இக்குகை உள்ள இடம், பழைய பல்லாவரம் என்னும் இடத்தில் பஞ்ச பாண்டவமலை என்று வழங்கப்படுகிறது பல்லாவரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு.

பல்லவ அரச குடும்பத்தவர் வாழ்ந்திருந்ததும் குகைக் கோயில்களையுடையதுமான மூன்று பல்லாவரங்களில் இது ஒன்று.

-

இப்போது இந்தக் குகைக்கோயில் முகம்மதியரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அவர்கள் இதை முகம்மதிய தர்க்காவாக உபயோகப் படுத்தி வருகிறார்கள். குகையில் சுண்ணாம்பு பூசி வெள்ளை

யடித்திருக்கிறார்கள்.