பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இங்கு இரண்டு பழைய சாசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மிகப் பழமையானது இக் குகைக்கோயிலைச் செய்வித்தவர் யார் என்பதைக் கூறுகிறது. இது பல்லவத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்டது. மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப்பட்ட தமிழ்ச் சாசனங்கள் மிகச்சில. அவற்றில் ஒன்று இந்தச் சாசனம். (இந்தப் பல்லவத் தமிழ் எழுத்தின் அமைப்பை 60 ஆம் பக்கத்திள்ள படத்தில் காண்க.) இந்தத் தமிழ்ச் சாசனத்தின் வாசகம் இது:

"பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துரும்மல்லன் குணபரன்

மயேந்திரப் போத்தரெசரு அடியான் வயந்தப்பிரி அரெசரு மகந் கந்தசேனன் செயிவித்த தேவகுலம்.

99

இந்தச் சாசனத்தின் கருத்து என்னவென்றால், பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்துருமல்லன், குணபரன் என்னும் சிறப்புப் பெயர்களையுடைய மயேந்திரப்போத்தரன் கீழ்ச் சிற்றரசனாக இருந்த வயந்தப்பிரிய அரசன் மகன் கந்தசேனன் என்பவன் இந்தக் கோயிலை அமைத்தான் என்பது.'

11

இதில் குறிப்பிட்ட மயேந்திரன் என்பவன் மகேந்திரவர்மன் முதலாம் ஆவன். இந்தச் சாசனம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் எழுதப்பட்டதாகும்.

இந்தக்

குகைக்கோயிலில்

உள்ள மற்றொரு சாசனம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டில், கோப்பெருஞ்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது; இக்கோயிலுக்கு நுந்தாவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

“சலபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 14-வது களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு வல்லத்து உடையார் திருவயந்தீசுரமுடைய நாயனார்க்கு” என்று இந்தச் சாசனம் தொடங்குகிறது.

இக்குகைக்கோயிலின் வெளியே குன்றின் பாறையில் ஜேஷ்டா தேவியின் உருவமும் பிள்ளையார் (கணபதி) உருவமும் செதுக்கப் பட்டுள்ளன. ஜேஷ்டாதேவியின் வணக்கம் பல்லவர் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்தது. பிற்காலத்தில் இந்தத் தெய்வ வணக்கம் மறக்கப்பட்டது.