பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

213

பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இப்போது இங்குத் தெய்வ உருவங்கள் காணப்படவில்லை. இக்குழிகளில் இருந்த உருவங்கள் பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் உருவங்களாக இருந்திருக்கவேண்டும் என்றும் நினைக்க வேண்டியிருக்கிறது. இங்குள்ள பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனமும் இது மும்மூர்த்தி ஆலயம் என்றே கூறுகிறது. நடுவில் உள்ள கருப்பக்கிருகத்தில் சிவன் உருவம் இருந்தது என்பதை, இக்கருப் பக்கிருகத்தின் வாயிலில் உள்ள துவாரபாலகர், பாம்பு அணிந்திருப்பதிலிருந்து அறியலாம். இக்குகைக்கோயிலில் உள்ள ஒரு தூணில் எழுதப்பட்டுள்ள சாசனம், இக்கோயிலை அமைத்த அரசன் பெயர் விசித்திர சித்தன் என்று கூறுகிறது. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று. ஆகையால், இக்கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட தாகும். இந்தச் சாசனத்தின் வாசகம் இது:-

ऊद

88

2

நியூட் களுவரைவி

மண்டாப்பட்டுச்

2

குகைக்கோயிலில் உள்ள வடமொழிச் சாசனம்