பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

ஏத தநிஷ்டக மத்ருமமலோஹ

மசுத விசித்ரசித் தேன

நிர்மா பிதம் ந்ருபேண ப்ரமேஸ்வர

விஷ்ணுலக்ஷிதாய தனம்.

இதன் பொருள்:

"செங்கல் இல்லாமலும் மரமில்லாமலும் உலோகம் இல்லாமலும் சுண்ணாம்பு இல்லாமலும் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது.

9913

இதனால், மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்களை முதன் முதலாக அமைத்தான் என்பதும், அவன் காலத்துக்குமுன்னே அமைக்கப்பட்ட கோயில்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் இரும்பு முதலிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டன என்பதும் தெரிகின்றன. விரைவில் அழிந்து டக்கூடிய செங்கல் சுண்ணாம்பு முதலிய பொருள்களைக் கொண்டு கட்டப்பட்ட பண்டைக் காலத்துக்கோயில்கள் இப்போது காணப்பட வில்லை. சங்க காலத்தின் பிறகு கி. பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்த சோழன் செங்கணான் எழுபத்தெட்டுப் பெரிய கோயில்களைக் கட்டினான் என்று நூல்களினால் அறிகிறோம். அவன் கட்டிய கோயில்கள் யாவும் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவைகளைக் கொண்டு கட்டியவையே. அவன் கட்டிய கோயில்கள், அப்பர் சம்பந்தர் காலத்தில் (கி. பி. 7 ஆம் நூற்றாண்டிலேயே) அழியும் நிலையில் ம் இருந்தன என்பது தெரிகிறது. கருங்கற்களைக் கொண்டு கற்றளி (கற்கோயில்) அமைக்கும் வழக்கம் மகேந்திரன் காலத்திற்குப் பிறகு, கி. பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது என்பது சாசன ஆராய்ச்சியினால் விளங்குகிறது.

5. தளவானூர்க் குகைக்கோயில்

தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் உள்ளது தளவானூர்க் கிராமம். இது பேரணி இரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து மைலில் இருக்கிறது; செஞ்சிக்குத் தென்கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு வடக்கேயுள்ள பாறைக்குன்றின் தெற்குப் பக்கத்தில் இக்குகைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரார் இக்குகைக் கோயிலைப்