பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

215

பஞ்சபாண்டவர் மலை என்று கூறுகிறார்கள். சத்துருமல்லேஸ்வராலயம் என்பது இதன் பழைய பெயர். சத்துருமல்லன் என்பது முதலாம் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. எனவே சத்துருமல்லன் என்னும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்குகைக்கோயில்,

ளவானூர்க் னூர்க் குகைக்கோயிலின் காயிலின் தரையமைப்பு.

இப்போது இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. இக் குகைக் கோயிலில், முன்மண்டபமும் ஒரு திருநிலையறையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் நீளம் 21 அடி 10 அங்குலம். அகலம் 19 அடி. உயரம் 8 அடி 10 அங்குலம். இந்த மண்டபத்தின் இருகோடியிலும் வெளிப்புறப் பாறையில் இரண்டு துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் மகேந்திரவர்மன் காலத்துத் தாமரைப்பூச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறத்துள்ள நடுத் தூண்களுக்கு மேலே மகர தோரணம் அழகாகப் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.14

இந்த மண்டபத்தின் மேற்குப்புறத்தில் பாறைச் சுவரில் கிழக்கு முகமாகத் திருநிலையறை செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வறையின் நீளம் 8 அடி 6 அங்குலம்; அகலம் 7 அடி 10 அங்குலம்; உயரம் 6 அடி 10 அங்குலம். இதில் சிவலிங்கத்தின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநிலையறையின் வாயிலில் இரண்டு துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் தூண் ஒன்றிலே பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு வெண்பா காணப்படுகிறது.