பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

அமைக்கப்பட்டுள்ளது. வழக்கப்படி முன் மண்டபமும் கர்ப்பக் கிருகமும் உள்ளன.15

இது திருமால் கோயில்.

கிழக்கு முகமாக அமைந்துள்ள இக் கோயில் மண்டபம் பதினெட்டு அடி நீளம் உடையது. அகலம் 13 அடி 6 அங்குலம், உயரம் 9 அடி. மண்டபத் தூண்கள், மகேந்திர பல்லவன் தூண்கள் போன்ற அமைப்புள்ளவை; தாமரைப் பூவின் உருவம் பொறிக்கப் பட்டவை.

திருநிலையறையின் வாயிலில் துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. சாந்தமாகக் காணப்படுகிற இந்த உருவங்கள் இரண்டு 6 கைகளையும் இடுப்பில் ஊன்றி நிற்கின்றன.

திருநிலையறைக்குள் நரசிங்கப் பெருமாள் உருவம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இது பழைய காலத்து உருவம் அன்று; பிற்காலத்தது.

மகேந்திரவாடி குசை கோயிலின் தரையமைப்பு.

இங்கு மண்டபத் தூண் ஒன்றில், பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாசகம் இது:

மஹித்தமம் ஸதாமுப மஹேந்த்ர தடாகமித ஸ்திரமுருகாரிதம் குணபரேண விதார்ய ஸிலாம் ஜனநயனாபிரம குணதாமி மஹேந்த்ர புரே

மஹதி மஹேந்த்ர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ: