பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மாமண்டூர்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஏரிக்கரையில்

உள்ள கற்பாறைக் குன்றில் அமைந்துள்ள இக் குகைக் கோயில்களில் வலது புறத்தில் இருப்பது திருமாலுக்கும் இடது புறத்தில் இருப்பது டது புறத்தில் இருப்பது சிவபெருமானுக்கும் அமைந்தவை.

மாமண்டூரின் ஒரு பகுதி மகேந்திரமங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. மகேந்திரமங்கலம் என்பது மகேந்திரவர்மன் பெயரால் ஏற்பட்ட ஊர். மாமண்டூர் ஏரிக்கு சித்ரமேகத் தடாகம் என்பது பழைய பெயர்.

வலது புறத்துக் குகையின் பாறைச் சுவரில் பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. ஆனால், இந்தச் சாசனம் உள்ள பாறை வெடித்துப் பிளவுபட்டிருக்கிறபடியால் ஆங்காங்கே எழுத்துக்கள் மறைந்து சாசனத்தை முழுவதும் படிக்க முடியாமல் செய்துவிட்டது. என்றாலும் சிற்சில இடங்களில் காணப் படுகிற சொற்றொடர்களைக் கொண்டு மகேந்திரவர்மனைப் பற்றிய செய்திகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

முதல் வரியில்....

6ஆவது வரியில்

7ஆவது வரியில்,

11ஆவது வரியில்...

கந்தர்வ சாஸ்த்ர............

மத்தவிலாசாதிபதம் ப்ரஹனோத்தமம்.......

.சத்ரு மல்லஸ்ய.......

.கல்பாத் ப்ரவிபஜ்ய....... வ்ருத்திம் தக்ஷிண

சித்ராக்யம் (கார) யித்வா யதாவிதிஹி....

12ஆவது வரியில்,........ சதுர்த்த..

ஸ்ச விவிதை ஹ க்ருத்வா வர்ண

என்னும் சொற்களும் தொடர்களும் காணப்படுகின்றன.

இதனால், சத்துருமல்லன் என்னும் சிறப்புப் பெயரையுடைய மகேந்திரவிக்கிரவர்மன் கந்தர்வ சாஸ்திரத்தில் (இசைநூலில்) வல்லவன் என்பதும், மத்த விலாசம் என்னும் நூலை இயற்றினவன் என்பதும், தக்ஷிண சித்ரம் என்னும் பெயருள்ள தென் இந்திய ஒவிய நூலுக்கு ஒர் உரை எழுதினான் என்பதும் தெரிகின்றன. இவ் விஷயங்களைப் பற்றி இந் நூலில் வேறு இடங்களில் காண்க.