பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

221

இதனால் இக் குகைக்கோயில்கள் இவ்வரசனால் அமைக்கப் பட்டவை என்பது ஐயமற விளங்குகிறது. இக் குகைக்கோயிலின் அமைப்பும் தூண்களின் அமைப்பும் சிற்பங்களின் அமைப்பும் இதை உறுதிப் படுத்துகின்றன.

இக் குகைகளில் முற்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இங்கு ஆங்காங்கே வண்ணங்கள் காணப் படுகின்றன. ஆனால், உருவான ஓவியம் ஒன்றேனும் காணப்பட வில்லை.

8. மேலைச்சேரிக் குகைக்கோயில்

தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சித் தாலுகா செஞ்சிக்கு வடக்கே மூன்று மைலில் உள்ளது மேலைச்சேரி என்னும் கிராமம். இந்தக் கிராமம் சிவசெஞ்சி என்றும் கூறப்படுவது உண்டு.

இந்த ஊருக்கு வடக்கே பாறைக்குன்று ஒன்று உண்டு. இந்தப் பாறையைக் குடைந்து, குகைக் கோயில் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குகைக்கோயிலுக்கு முன்புறத்தில் செங்கல்லினால் மண்டபம் கட்டப்பட்டிருப்பதனாலே, வெளிப்பார்வைக்கு இது கு குகைக் கோயிலாகத் தோன்றாது. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும். இவ்வூரார் இந்தக் கோயிலை மத்திளேசுவரர் தூண் ஒன்றில் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சாசனம் இச்கோயிலை, ஸ்ரீசிகாரி பல்லவேசுவரம் என்று கூறுகிறது.

செங்கற் சுவர்கொண்டு பிற்காலத்தில் அமைக்கப்பட்ட முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், பாறையில் அமைக்கப் பட்ட குகைக்கோயிலைக் காணலாம். இது ஒரு மண்டபத்தையும் அந்த மண்டபத்தின் நடுவில் ஒரு கர்ப்பக் கிருகத்தையும் கொண்டுள்ளது. பாறையைச் செதுக்கி அமைக்கப் பட்டுள்ள இந்த மண்டபத்தின் நீளம் 19 அடி 9 அங்குலம்: அகலம் 8 அடி 9 அங்குலம். உயரம் 6 அடி 8 அங்குலம். இந்த மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திருநிலையறை ஏறக்குறையச் சதுரமான அமைப்புள்ளது. இதன் அகலம் 8 அடி 7 அங்குலம். நீளம் 8 அடி 4 அங்குலம். உயரம், மண்டபத்தின் உயரத்தைப்போலவே 6 அடி 8 அங்குலம். இந்தத் திருநிலையறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் பீடத்துடன் 4 அடி 9 அங்குலம் உள்ளது. பீடமும் சிவலிங்கமும் அதே பாறையில் அமைக்கப்பட்ட “சுயம்பு” உருவங்கள்.