பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தக் குகைக்கோயிலில் வேறு சிற்பங்கள் காணப்படவில்லை. இந்தக் கோவிலில் இப்போதும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயிலின் தூண் ஒன்றில் வடமொழிச் சாசனம் பல்லவக்கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

மேலச்சே

குகைக்கோயில் தரையமைப்பு

காரிதம் இதம் ந்ருபதினா

சந்த்ரா தித்யேன ஸார்வபௌமேன

ஸ்ரீஹிகாரி பல்லவேஸ்வரமிதி

ஸைவங்தாம ஹித்திர் அஷ்டுக்ர.

“ஸ்ரீசிகாரி பல்லவேஸ்வரம் என்னும் பெயருள்ள இந்தக் கோயில் சிங்கபுரத்தில் சந்திராதித்யன் என்னும் அரசனால் அமைக்கப் பட்டது”16 என்பது இதன் பொருள்.

சாசனத்தில் சிங்கபுரம் என்று கூறப்படுகிற ஊர் இப்போது சிங்கவரம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. சிங்கவரம் மேலைச்சேரிக்குத் தெற்கே ஒரு மைலில் உள்ளது. பண்டைக் காலத்தில் மேலைச்சேரியும் சிங்கவரத்துடன் சேர்ந்த ஊராக இருந்ததுபோலும்.

மேற்படி சாசனத்தில் கூறப்படுகிற சந்திராதித்யன் என்னும் அரசன் யார் என்பது தெரியவில்லை. சந்திராதித்யன் என்பது சிறப்புப்