பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

225

இந்தச் சாசனம் இந்தக் குகைக்கோயிலை “அறிவன் கோயில் என்று கூறுகிறது. எனவே, இக் குகைக்கோயிலின் பழைய பெயர். அறிவன் கோயில் என்று அறியப்படுகிறது. ஜைனக் கடவுளுக்கு அருகன் என்பது பெயராகலின் அருகன்கோயில் என்று இதற்குப் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும், அருகன்கோயில் என்பதைத் தான் தமிழில் அறிவன்கோயில் என்று வழங்கினார்கள். என்றும் சிலர் கருதுகின்றனர். அல்லது கருதுவதற்குக் காரணம் இல்லை. ஏனென்றால் அருகக்கடவுளுக்கு அறிவன் என்றே பெயர் உண்டு. இதனைச் சிலப்பதிகாரம்,

66

'அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன்

(சிலம்பு, 10; 176 - 180)

என்று கூறுவதினால் அறியலாம். கும்பகோணம் தஞ்சாவூர் முதலிய ஊர்களிலுள்ள ஜைனர்கள் அவ்வப்போது இக்குகைக் கோயிலுக்கு வந்து அருகக் கடவுளை வழிபட்டுச் செல்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

சித்தன்னவாசல் குகையின் வடகிழக்குப் புறத்தில் மழமழப் பான பாறையில் இயற்கையாக அமைந்துள்ள குடகில் பதினோ கற்படுக்கைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இக் கற்படுக்கை களின் தலைப்புறம் தலையணை போன்று சற்று உயரமாக அமைக்கப் பட்டுள்ளன. ஜைன முனிவர்கள் இக்கற்பாறைப் படுக்கையில் படுத்து உறங்குவது வழக்கம். இங்கு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட சாசனங்கள் உள்ளன. இவை கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. ம் (மகேந்திரன் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களும் இங்கு உள்ளன.) இவை இக்கற்படுக்கைகளை உபயோகித்துவந்த சமண முனிவர்களின் பெயர்களாகத் தெரிகின்றன.

6

“தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன், திருப்பூரணன் திட்டைச் சாணன், திருச்சாத்தன் ஸ்ரீபூரணச்சந்திரன், நியத்கரன்பட்டக் காழி......த்தூர்க் கடவுளன்” என்னும் பெயர்கள் காணப் படுகின்றன. (கடவுளன் என்றால் முனிவன் என்பது பொருள்.)