பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

227

சீயமங்கலக் குகைக்கோயிலின் தரையமைப்பு

மண்டபத் தூணில் சிங்கம் ஒன்று நின்றுகொண்டு ஒரு முன்காலைத் தூக்கி நிற்பது போன்று சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. தூண்களில் தாமரைப் பூவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனம், இக்கோயிலை அமைத்த அரசன் பெயர் லலிதாங்குரன் என்றும், இக்கோயிலின் பெயர் அவனிபாஜன பல்லவேசுவரம் என்றும் கூறுகின்றது.

அந்தச் சாசனத்தின் வாசகம் இது:

66

"லலிதாங்குரேண ராஜ்ஞாவ

நிபாஜன பல்லவேஸ்வரந்நாம

காரிதமேதத்ஸவேதா கரண்ட மிவபுண்ய ரத்நாநம்.

இதன் கருத்து இது:

"புண்ணியமாகிய இரத்தினங்களை வைக்கும் செப்புப்போல (அருங்கலச் செப்புபோல), அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்னும் பெயருள்ள இக் கோவிலை லலிதாங்குரன் என்னும் அரசன் அமைத்தான்.