பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சீயமங்கலம் குகைக்கோயிலும் தளவானூர்க் குகைக் கோயிலும் ஒன்றுக்கொன்று அண்மையில் உள்ளன.

"

சீயமங்கலக் குகைக்கோயில், மகேந்திரவர்மனுடைய தந்தை யான சிம்மவிஷ்ணுவின் காலத்தில் தொடங்கப்பட்டு. மகேந்திரவர்மன் காலத்தில் முற்றுப்பெற்றிருக்கக்கூடும் என்று கருதப் படுகிறது.

6

11. குரங்கணின் முட்டத்துக் குகைக்கோயில்

வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு தாலுகாவில் குரங்கணின் முட்டம் இருக்கிறது. இவ்வூர் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே மூன்று மைல். குரங்கணின் முட்டத்தில் பாடல்பெற்ற சிவன் கேயில் உண்டு னால், அது குகைக்கோயில் அன்று. குரங்கணின் முட்டத்திற்கு அருகில் பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் பெயருள்ள ஒர் ஊர் இருக்கிறது. இந்தப் பல்லவபுரத்திற்கு அருகில் ஒரு குகைக்கோயில் உண்டு. இக் குகைக்கேயிலை இவ்வூரார் பாண்டவர் மலை, பஞ்சபாண்டவர் மலை என்றும் கூறுகிறார்கள்.

ஒன்று.

பல்லவபுரம் என்னும் பெயருள்ள மூன்று இடங்களில் இது

இங்குள்ள ஒரு பெரும்பாறையைக் குடைந்து இக்குகைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றக் குகைக்கோயில்களைவிட இக் குகைக்கோயில் அமைப்புமுறை புதுமையானது. மண்டபமும் மண்டபத்தின் எதிரில் மூன்று திருநிலையறைகளும் மண்டபத்தின் வலது பக்கம் இடது பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு திருநிலையறைகளும் ஆக ஏழு திருநிலையறைகள் உள்ளன. இவ்வறைகளில் இப்போது உருவங்கள் இல்லை. ஆனால், முற்காலத்தில் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு அறையிலும் சிறுகுழிகள் பாறையில் காணப்படுகின்றன.

இங்கு இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்துச் சாசனம் ஒன்று காணப்படுகிறது. தஞ்சையையும் காஞ்சியையும் வென்று கொண்ட கன்னர தேவரின் (இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன்) 24-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம்