பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

229

ஏரிகீழநாட்டுக் காலியூர்க் கோட்டத்துப் பல்லவபுரம் கல்மடை காத்த ஆழ்வாரின் ஸ்ரீபலிக்காக இவ்வூரார் நிலம் தானம் செய்ததை இந்தச் சாசனம் கூறுகிறது.7

குரங்கணின் முட்டம் குகைக்கோயில் தரையைமப்பு

இந்த ஆதாரத்தைக் கொண்டுபோலும், இக் கோயிலை வைணவக் கோயில் என்று எபிகிராபி அறிக்கை18 கூறுகிறது. பிற்காலத்து அரசனான இராஷ்டிரகூட அரசன் காலத்தில் இக்கோயில் இப்பெயருடன் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இக் குகைக் கோயிலில் உள்ள சிற்பங்கள் இதனை ஆதரிக்கவில்லை. உண்மையில் இக்குகைக்கோயில் மும்மூர்த்திகளுக்கும் உரிய கோயிலாகும். எப்படி என்றால், மண்டபத்துக்கு எதிர்ப்புறத்திலுள்ள மூன்று கருப்பக் கி ருகங்களில் தெற்கில் உள்ள திருநிலை யறைவாயிலில் மீசை தாடியுள்ள துவாபாலகர்களும் நடுவில் உள்ள திருநிலையறையின் வாயிலில், தலையில் மாட்டுக் கொம்பு போன்ற அணியையுடைய துவாரபாலகர் உருவங்களும், வடக்குப்புறத் திருநிலையறையில் தாடி மீசையில்லாத துவாரபாலகர் உருவங்களும் காணப்படுகின்றன. ஆகவே, இந்தக் குகைக் கோயில் பிரம்மா, சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு ஏற்பட்ட மும்மூர்த்திக் கோயிலாகும். ஆனால், மண்டபத்தில் இடப்புறம் வலப்புறங்களில் உள்ள நான்கு திருநிலையறைகளில் எந்தெந்தத் தெய்வ உருவங்கள் அமைக்கப் பட்டிருந்தன என்பது தெரியவில்லை.