பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தக் குகைக்கோயில் மண்டபத்தின் நீளம் 28 அடி 4 அங்குலம்; அகலம் 14 அடி; உயரம் 8 அடி 4 அங்குலம். இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. இவை மகேந்திரன் காலத்துச் சதுரத் தூண்கள் போன்றவை.19

இந்தக் குகை, முதல் மகேந்திரவர்மன் காலத்தது அன்று; பிற்காலத்தது என்று எபிகிராபி அறிக்கை கூறுகிறது. ஆனால், தூண்களின் அமைப்பு, துவாரபாலகர் உருவ அமைப்பு முதலியவை, மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோயில் என்பதைத் தெரிவிக்கின்றன. இதில் பல்லவ அரசனுடைய சாசனங்கள் காணப்படவில்லை. ஆனால், குகையின் மண்டபத்தின் முன்பக்கத்தில், மேற்புறப்பாறையில் பல்லவக் கிரந்த எழுத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கிற அடையாளம் காணப்படுகிறது.

குறிப்பு:- இந்தக் குகைக்கோயில் உள்ள பல்லவபுரத்தில் பல்லவ அரச குடும்பத்தார் வாழ்ந்திருக்கக்கூடும். பல்லாவரத்திற்கு (பல்லவபுரத்திற்கு) அருகில் கணிகிலுப்பை என்னும் சிறு கிராமம் இருக்கிறது. இங்குப் பல்லவரின் நிமித்திகர் (நிமித்திகர் = கணிகள்) இருந்தனர் போலும். கணிகிலுப்பையில் ஒரு பௌத்தக்கோயில் இருந்தது. இக்கோயில் இப்போது மறைந்துவிட்டது. இதிலிருந்த புத்த உருவம் (தியானத்தில் அமர்ந்திருப்பது போன்றது) இவ்வூர் ஏரிக்கரைக்கருகில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கிறது. கோயில் இருந்த இடத்தில் கருங்கல் பீடம் மட்டும் காணப் படுகிறது. இக்கோயில் இருந்த இடத்தில் ஒரு பிள்ளையார்கோயில் கட்டியிருக்கிறார்கள். இக்கோயில் தெருக்கோடியில் ஒரு கருங்கல் நடப்பட்டிருக்கிறது. இக்கல்லில் பௌத்தரின் தருமச்சக்கரம் முதலிய சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தப் பௌத்தக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடும். ஏனென்றால், பல்லவ அரசர்களில் சிலர் புத்தவர்மன் என்னும் பெயருடன் பௌத்தர்களாக இருந்தனர்.

பல்லவபுரத்திற்கு அருகில் தூசி, மாமண்டூர் என்னும் ஊர்கள் உள்ளன. தூசி என்பது தூசிப்படையிருந்த ஊர். மாமண்டூர் என்பது யானைப்படை குதிரைப்படையிருந்த ஊர். (மா=மிருகம், யானை, குதிரையைக் குறிக்கிறது.) பல்லவபுரம் கணிகிலுப்பை, தூசி, மாமண்டூர் என்னும் இவை ஒன்றையொன் றடுத்திருப்பதும், காஞ்சி புரத்துக்கு அருகில் கில் இருப்பதும் இங்குப் பல்லவர் காலத்தில் பல்லவ அரச குடும்பத்தினர் வாழ்ந்திருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன.