பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

233

தேசிங்குராசன் செஞ்சியை அரசாண்டகாலத்தில், சிங்கவரத்து அரங்கநாதரை உபாசக மூர்த்தியாகக் கொண்டிருந்தான் என்றும், கி. பி. 1714 இல் ஆர்க்காட்டு நவாபுடன் தேசிங்கு போரிட்டபோது, தேசிங்கு அரங்கநாதரிடம் போருக்குச் செல்ல உத்தரவு கேட்டார் என்றும், அரங்கநாதர், போருக்குப் போக வேண்டாம் என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டதாகவும் கதை கூறுவர் சுமார் 14 அடி நீளமுள்ள அரங்கநாதர் உருவம் தலையைத் திருப்பிக் கொண்டி ருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

13 திருக்கழுக்குன்றத்துக் குகைக்கோயில்

செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்பதுகல் தூரத்தில் திருக்கழுக்குன்றம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊரில் திருக்கழுக்குன்றம் என்னும் மலை இருக்கிறது. மலையின் உச்சியில் வேதகிரீசுவரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் போகவேண்டுமானால், மலையின் தெற்குப் புறத்திலிருந்து படி ஏறவேண்டும். இந்த மலைப்படியில் ஏறிச் சென்றால் பாதி வழியில் கிழக்கு மேற்காகப் பிரிந்து செல்கிறது. கிழக்கு வழியாகச் சென்றால் ஒரு பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயிலைக் காணலாம்.

திருக்கழுக்குன்றத்துக் குகைக்கோயில் தரையமைப்பு