பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தக் குகைக்கோயிலை ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறுகிறார்கள். இந்தக் குகைக்கோயில், மலையுச்சியில் உள்ள வேதகிரி ஈசுவரர் கோயிலுக்கு ஐம்பதடி கீழே இருக்கிறது.

Լ

இந்தக் குகைக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தரை மட்டத்திற்கு ஐந்து அடி உயரத்தில் இக் இக் குகைக்கோயில் அமைந்திருப்பதினாலே, குகைக்குச் செல்லப் பாறையில் படிகள் அமைந்துள்ளன. படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய மண்டபமும் அதன் மத்தியில் ஒரு திருநிலையறையும் பாறையைக் குடைந் தமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த மண்டபத்தில் நீளம் 22 1/2 அடி, அகலம் 17 அடி, உயரம் 9 அடி. திருநிலையறையின் நீளம் 8 அடி, அகலம் 7 அடி. மண்டபத்தின் தரையைவிட மூன்று அடி உயரத்தில் திருநிலையறையின் தரை அமைந்திருப்பதனால் திருநிலையறையின் தரை அமைந்துள்ள அறையின் வாயிலில் துவாரபாலகர்களின் உருவங்கள் மகேந்திரன் காலத்து உருவ அமைப்புடன் காணப்படுகின்றன. இரண்டு கைகள் உள்ள இத் துவாரபாலகர் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மற்றொரு கையைப் பெரிய தண்டாயுதத்தின்மேல் தாங்கி நிற்கின்றனர். கருப்பக் கிருகத்தினுள்ளே பெரிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருக்கிறது. பூஜை நடைபெறுவது இல்லை. கருப்பக்கிருகத்திற்கு வெளிப்புறத்தில் மண்டபத்தின் இருகோடியில் தெற்குப்புறத்தில் பிரம்மனுடைய உருவமும் கிழக்குப் புறத்தில் திருமாலுடைய உருவமும் பாறைச் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு உருவங்களைத் தவிர, இந்த மண்டபத்தின் வடபுறச் சுவரிலும் தென்புறச் சுவரிலும் இரண்டு துவார பாலகர் உருவங்கள் ஒன்றையொன்று பார்த்தாற்போலப் பெரிய உருவத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பட்டுள்ளன. இவை, கருப்பக்கிருகத்துத் துவாரபாலகரைப் போலல்லாமல், கடவுளைப் போற்றுவதுபோல ஒரு கையை உயரத் தூக்கிக்கொண்டும் மற்றொரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டும் நிற்கின்றன.

இங்குள்ள தூண்களுக்கு மேலே தூலம்போல் அமைந்துள்ள பாறையில் மகேந்திரவர்மனுடைய மகன் “வாதாபிகொண்ட நரசிம்மவர்ம” னுடைய சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சாசனம் எக்காரணத்தினாலோ முடிவுற எழுதப் பெறாமல் அரைகுறையாகக் காணப்படுகிறது.