பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

237

காலத்திலும் அமைக்கப்பட்டவை. ஆனால், “அர்ச்சுனன் தபசு” என்று கூறப்படுகிற சிற்பப்பாறையும் வேறு மூன்று குகைக்கோயில்களும் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டன. இவற்றில் “அர்ச்சுனன் தபசு” என்று தவறாகக் கூறப்படுகிற சகரசக்ர வர்த்தி சிற்பத்தைப்பற்றி மகேந்திரன் காலத்துச் சிற்பங்கள் என்னும் தலைப்பில் கூறியுள்ளோம். இங்கு மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் அமைத்த மூன்று குகைக்கோயில்களை மட்டும் ஆராய்வோம்.

1. கோடிக்கால் மண்டபம்

கோடிக்கால் மண்டபம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற குகைக்கோயில், மகாபலிபுரத்துப் பாறைக் குன்றின்மேல் அமைக்கப் பட்டுள்ளது. இது மேற்குப் பார்த்த குகைக்கோயில். இதில் சாசனங்கள் காணப்படவில்லை. இது கொற்றவை (துர்க்கை)க்காக அமைக்கப் பட்டது. மகேந்திரவாடிக் குகைக்கோயிலைப் போன்ற அமைப்பு டையது. முன்மண்டபத்தையும் அதற்குள் திருநிலையறை யையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் நீளம் 21 அடி 10 அங்குலம்; அகலம் 8 அடி; உயரம் 8 அடி 3 அங்குலம். மண்டபத்தின் முன்புறத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. அவை மேலும் கீழும் சதுரமாகவும் நடுப்பகுதிப் பாகம் எட்டுப்பட்டையுடையதாகவும் உள்ளன. கொற்றவைகோயில் ஆகையினால் கருப்பக்கிருகத்தின் வாயிற்புறத்தில் பெண்துவார பாலகர்களின் உருவங்கள் காணப்படு கின்றன. இவை மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்களைப் போலவே எதிர்ப்பார்வையில் அமைந்துள்ளன.23

6

மண்டபத்தின் தரைமட்டத்துக்குமேல் இரண்டடி உயரத்தில் திருநிலையறை அமைந்திருப்பதனால், அதற்குள் போக இரண்டு படிகள் அமைந்துள்ளன. இவற்றில் முதல் படி அரைவட்டமாக அமைந்திருக்கிறது. திருநிலையறையிலும் மண்டபத்தின் வெளிப் புறத்திலும் முற்காலத்தில் மரக்கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதற்கு அடையாளமாக சிறுகுழிகள் பாறையில் காணப்படு கின்றன. திருநிலையறையில் இப்போது துர்க்கை உருவம் இல்லை. ஆயினும் முற்காலத்தில் துர்க்கையின் உருவம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது என்பதில் ஐயம் இல்லை. இப்போது இவ்வூர்ப்புறத்தில் சப்தமாதர்களுடன் வைக்கப்பட்டிருக்கிற சிதைந்துள்ள கொற்றவையின் உருவந்தான் முன்பு இக் குகைக்