பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வராகமண்டபம்: இந்த மண்டபமும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. மேற்குப்பார்த்த இந்த மண்டபத்தைச் சிங்கத்தூண்கள் தாங்குகின்றன. இந்த மண்டபம் 20 1/2 அடி நீளமும் 8 1/2 அடி அகலமும் 10 1/2 அடி உயரமும் உடையது. மண்டபத்தின் பின்புறத்தில், திருவுண்ணாழிகை அமைந்திருக்கிறது. திருவுண்ணா ழிகை வாயிற்புறத்தில் துவார பாலகர் உருவங்கள் அமைத்திருக் கின்றன. பாறைச் சுவர்களில், வராகப்பெருமாள், கஜலஷ்மி, கொற்றவை, திரிவிக்ரமமூர்த்தி இவர்களின் உருவங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேல் விதானத்தில் தாமரைப் பூக்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களைப் பற்றி இந்நூலின் மற்றோர் இடத்தில் காண்க.

"

ராக மண்டபம் ” என்னும் என்னும் குகைக்கோயிலின் தரையமைப்புப் படம்

கருவறையில் இப்போது மூர்த்தி இல்லை. ஆகையால் இந்தக்கோயில் எந்தக் கடவுளுக்கு அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், வைணவ சம்பந்தமான சிற்பங்கள் இங்குக் காணப்படுவதனாலே இக்கோயில் திருமாலுக்கு அமைக்கப்பட்ட தென்று கருதலாம்.

இராமாநுச மண்டபம் : “இராமாநுச மண்டபம்" என்று இப்போது பெயர் கூறப்படுகிற இக் குகைக்கோயில், மாமல்ல புரத்துக் கலங்கரை விளக்கு2 உத்தியோகஸ்தரின் விடுதிக்குப் பின்புறத்தில் இருக்கிறது. வைணவ ஆசாரியரான இராமாநுசர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே, மாமல்லன் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட இக் குகைக் கோயிலுக்கு,

ம்