பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இக்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கோயிலில் இருந்த சிவலிங்கம் பிற்காலத்தில்

எக்காரணத்தினாலோ எடுபட்டுப் போயிற்று. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்துக் கலெக்டருடைய உத்தரவு பெற்று, இவ்வூரார் இக் கோயிலில் கணேசர் உருவம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். இந்தக் கணேசர் பெயரினால்தான் இப் பாறைக்கோயில் இப்போது "கணேச ரதம்” என்று பாமரர்களால் பெயர் கூறப்படுகிறது. ஆர்க்கியாலாஜி இலாகாக்காரரும் இக் கோயிலுக்குக் “கணேச ரதம்" என்றே பெயர் எழுதிவைத்திருக் கிறார்கள்.

அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்னும் பழைய பெயரையுடைய இப் பாறைக்கோயில் 20 அடி நீளமும், 11 1/2 அடி அகலமும், 28 அடி உயரமும் உள்ளது. மேற்குப் பக்கம் பார்த்த இந்தக் கோயிலின் முன்பக்கத்தில் ஏறக்குறைய 20 அடி நீளமுள்ள அர்த்த மண்டபம் இருக்கிறது. அர்த்த மண்டபத்தின் இரண்டு கோடியிலும் இரண்டு சிங்கத் தூண்களும் மத்தியில் இரண்டு சிங்கத் தூண்களும் ஆக நான்கு தூண்கள் இந்த மண்டபத்தைத் தாங்குகின்றன. மண்டபத்தின் இருகோடியிலும் இரண்டு மனித உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக (Bas relief) அமைக்கப்பட்டுள்ளன. இவை துவாரபாலகர் உருவங்கள் அல்ல. அரசர் உருவம் போலக் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின்

நடுவில், திருவுண்ணாழிகை (கருவறை) அமைத்திருக்கிறது. இக் கருவறை 6 அடி 11 அங்குலம் நீளமும், 3 அடி 9 அங்குலம் அகலமும், 6 அடி 8 அங்குலம் உயரமும் உடையது.

T

" கணேச ரதம் ” என்னும் பாறைக் கோயிலின் தரை அமைப்புப் படம்