பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மாமல்லபுரத்து யானைக் கோவில்

ப மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தின் உள்ள செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 18-மைல் தூரத்தில் கடற்கரை யோரத்தில் இருக்கிறது. இங்குப் பாறைகளைச் செதுக்கியமைக்கப்பட்ட

சிற்பங்களும் கோவில்களும் உள்ளன. இப்பாறைக் கோவில்களில் பஞ்சபாண்டவர்கள்' என்னும் பெயருள்ள தொகுதி ஒன்றுண்டு. இத்தொகுதிகளைச் சேர்ந்த ஒன்று தான் நாம் கூறுகிற மாமல்லபுரத்து கோவில் என்பது. இந்தக் கோவில் அமைப்பைப் பாமரமக்கள் ‘நகுல சகாதேவ ரதம்' என்று பெயர் கூறுகிறார்கள்.

யானைக் கோவில்

66

'பஞ்சபாண்டவரதங்கள்” என்று பெயர் கூறப்படுகிற இவை உண்மையில் இரதங்கள் அல்ல. கோவில்களாகும். அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த கோவிற் கட்டட அமைப்புக்களின் உருவத் தோற்றத்தை இக்கருங்கற்பாறைகளில் அக்காலத்துச் சிற்பிகள் அமைத்துக்காட்டியுள்ளனர். இளங்கோயிலின் அமைப்பு, இரண்டு நிலை மூன்று நிலை மாடக்கோவில்கள் யானைக் கோவில் முதலிய கோவில்களின் வெளித்தோற்றமும் அமைப்பும் எவ்வாறிருந்தன என்பதைக் காட்டுவதற்காகவே இக் கோவில்கள் கருங்கற்களில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கட்டடங்களின் உட்புற அமைப்புகளைக் காட்டுவது இவற்றை அமைத்த சிற்பிகள் நோக்கம் அன்று. உட்புற அமைப்புக்களையும் அமைத்துக்காட்டுவது அச் சிற்பிகளின் நோக்கமாயிருந்தால், உட்புற அமைப்புகளையும் அமைத்துகாட்டியிருப்பார்கள். அவ்வாறில்லாமல், பலவிதக் கோவில் அமைப்புகளில் வெளித் தோற்றத்தை மட்டும் காட்டுவதே அவர்கள் நோக்கமாக இருந்தபடியால், கருவறையாகிய திருவுண்ணாழி கைகளை அமைக்காமல், விமானங்கள் சுவர்கள். கூடுகள் கூட கோஷ்டபஞ்சரங்கள் ஆகிய வெளித் தோற்றங்களைமட்டும் செம்மையாகவும் செப்பமாகவும் அமைத்துக்காட்டியுள்ளனர். சில பாறைக்கோவில்களின் விமான அமைப்புகளைமட்டும் நுணுக்க மாகவும் செப்பமாகவும் செய்துவிட்டு, மற்றப்பகுதிகளைச் செம்மை யாக முடிக்காமல் விட்டிருக்கின்றனர்.