பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படவிளக்கம்

வண்ண ஒவியம்

பக்கம்-304

சித்தன்ன வாசல் குகைக் கோயிலின் உள்ள நடனமங்கை ஓவியம். சென்னை சித்திர கலாசாலை ஓவியப் புலவர் எஸ். தனபால் அவர்கள் நேரில் சென்று. அவ் ஓவியம் தற்பொழுது உள்ள நிலையில் தீட்டியது.

படம் -1

பக்கம்-304

கருவறைகளின் தரையமைப்பு

1. சதுர அமைப்பு; கருவறையும் அர்த்தமண்டபமும்.

2. வட்டமான அமைப்பு, காஞ்சீபுரத்துச் சுரஹரீசுவர் கோயிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த நார்த்தா மலை, மேல்மலையில் உள்ள விஜயாலய சோழீசுரமும் இவ்வமைப் புடையன.

3. பல்லவர் காலத்துக் குகைக்கோயிலின் தரையமைப்பு. சித்தன்னவாசல்.

4. நீண்ட அரைவட்டம். யானைக் கோயில் அமைப்பு.

5. நீண்ட சதுரம்; காஞ்சீ கயிலாசநாதர் கோயிலில் உள்ள மகேந்திரப் பல்லவேச்சுரமும், மகாபலிபுரத்துக் “கணேச ரதமும்” வேறு சில கோயில்களும் இவ்வமைப்புடையன.

6. பனமலையில் (தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் தாலுகா) உள்ள பல்லவர் காலத்துக் கோயில் அமைப்பு.

7. காஞ்சீபுரத்துக் கயிலாசநாதர் கோயில் (இராஜசிம்மேசுவரம்) தரையமைப்பு.