பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகேந்திர வர்மன்

பதிப்புரை

நம் தமிழகத்தில் முடியுடை வேந்தர்கள் மூவர் ஆட்சி முடிந்தபின், பிற்காலத்தே ஆண்ட வேற்று மொழி வேந்தர்கள் பலராவர். அவருள், பல்லவ மன்னர்களென்பவர் நாட்டைக் கைக்கொண்டு அரசாண்டனர். அம் மன்னர் வழியில் வந்தோன், மகேந்திரவர்மனெனப் பெயரிய வேந்தனாவன்.

இம்மன்னனால் நம் நாட்டில் கலையும் இசையும் பெருகி வளரலாயின. இவன் காலத்தே சிற்பக்கலை செழித்தோங்கிச் சிறந்திருந்தது. இவ்வரசன் வரலாற்றைப் பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டு, கோயில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் முதலியவற்றின் துணைக்கொண்டு தம் நுண்ணிய பேரறிவால் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதி உதவியுள்ளனர்.

இதன்கண் வரலாற்றுச் சான்றுடன் கூடிய நிழலோவியப் படங்களும் சிற்ப உருவப்படங்களும் இன்றியமையாத இடங்களில் விளக்கத்துக்காக இணைத்து நன்முறையில் நூலுருவாக்கி ‘மகேந்திர வர்மன்' என்னும் பெயர்சூட்டி வெளியிட்டுள்ளோம்.

தமிழ் அன்பர்கள் வாங்கிக் கற்றுப் பழங்கால உண்மை வரலாறு கண்டுணர்ந்து இன்புறுவார்களென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

உரிமை விளக்கம்

இந்நூலில் உள்ள படங்களில், முகப்புப் படங்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12-ம், 117, 118, 119, 122 ஆம் பக்கங்களில் உள்ள படங்களும் இந்திய அரசாங்க ஆர்க்கியாலஜி இலாகாவுக்கு உரிமையானவை. மற்றப் படங்கள் ஏ. ஹெச். லாங்ஹர்ஸ்ட் அவர்கள் எழுதிய ‘பல்லவர் சிற்பங்கள்’ என்னும் நூலிலிருந்தும், ழுவோ-துப்ராய் அவர்கள் எழுதிய ‘பல்லவர் பழமைகள்', 'திராவிடச் சிற்பம்' என்னும் நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலை சீனி. வேங்கடசாமி.