பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

321

பிடித்துத் தன துரிமையாக்கிக்கொண்டான்: அந் நினைவுக்குறியாக வெற்றித் தூணும் நாட்டினான். இச் சிறப்பால் அந் நகரோட்டைவு கொண்டு அதுமுதல் இவன்பெயர், வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் என்னும் பெயரால் வழங்கலாயிற்று. இவ் வரலாற்றைச் சேக்கிழார்பெருமான், தம் திருத்தொண்டர் புராணத்துள்,

‘மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்

தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்' (பெரிய. சிறுத்தொண்டர்: சு.)

எனவரும் செய்யுளால் அறியலாம்.

இத்தகைய வெற்றிவேந்தன் நரசிம்மவர்மன், போரிற் சிறந்திருந் தமைபோலவே அரசியலிலும், அறத்தினும், பிற நல்லியல்புகளிலும் மேம்பட்டு விளங்கினான். இவன் மேற் கொண்டிருந்த சமயம், சைவம்; இவன் மாமல்லபுரத்தில் 'இரதங்கள்' என் வழங்கும் பாறைக்கோயில் களையும், குகைக் கோயில்கள் சிலவற்றையும் அமைத்துள்ளான்; பிற வரலாறுகளை இந்நூலகத்து ஆங்காங்கே காண்க.

நம் தமிழ்மொழிக்கண் வரலாற்றுண்மை காணும் நூல்கள் மிக்குப் பல்கவில்லை. அவை மிகப்பெருக வருதல் நலமென்பது எமது வேணவா. அவ் வேடங்கையின் விளைவாக இந் நூலாசிரியரான, திரு. மயிலை சீனி. வேங்கடசாமியவர்களைக்கொண்டே முன்னரேயே சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மகேந்திர வரமன் என்னும் நூல்களை வரைவித்து வெளியிட்டுள்ளோம். இப்போதும் இந் நூலை அவர்கள் தம் அஃகியகன்ற அறிவின் மதுகையாலும், ஆய்புலத் தானும், கல்வெட்டு முதலிய சான்றுகளானும் அவ்வவற்றுக்குரிய விளக்கப் புகைநிழலோவியங்களுடன் விளக்கி எழுதித் தந்துள் ளார்கள்.

பெருமை சான்ற இவ் அருமை நூலை நன்முறையில் அச்சியற்றி நூலுருவாக்கி, எம் கழகவழிக் கண்கவர் வனப்புற வெளி யிட்டுள்ளோம். ஆய்புலவாணரும், அறிஞரும், வரலாற்றுண்மையும் நம் செந்தமிழ்த் திருநாட்டின் செம்மையும் உணர்ந்தின் புறுதலுடன், எம்மையும் இவ்வாக்கமிக்க வரலுாற்றுண்மை காணும் பணிக்கண் ஊக்க முன்வருவார்களென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.