பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போது கோயில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வ உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக அமைக்கப்பட வில்லை என்பதும் அவை பிற்காலத்திலே அமைக்கப்பட்டன என்பதும் ஆகும்.

பலவகை மூர்த்தங்கள்

சைவர், சிவபெருமானுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங் களாகக் கற்பித்தார்கள். வைணவர்களும் திருமாலுடைய திருவுரு வத்தைப் பல மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள். கடவுளின் பலவித ஆற்றல்களைக் காட்டுவதற்காகவே இவ்வாறு பல்வேறு மூர்த்தங் களைக் கற்பித்தார்கள். கடவுளின் சக்தியை அம்மன் தேவி என்னும் பெயரால் பெண் உருவமாகக் கற்பித்தார்கள்.

சிவபெருமானுடைய திருவுருவங்களை, இருந்த கோல மாகவும் நின்ற கோலமாகவும் ஆடுங்கோலமாகவும் கற்பித்தார்கள். இதனை நின்றான் இருந்தான் கிடந்தான், உருவம் என்பார்.

மற்றும் கணபதி, முருகன், அம்மன் முதலிய தெய்வ உருவங்களைப்பற்றி எழுதுவதற்கு இது இடமன்று.

8

பௌத்த ஜைன சிற்பங்கள்

நமது நாட்டிலே பண்டைக் காலத்திலே, (கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில்) பௌத்த மதம் நன்றாகச் செழித்திருந்தது. அக்காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள், புத்தர் உருவத்தையும் பௌத்தத் தெய்வ உருவங்களையும் வழிபட்டார்கள். அவர்களும், ஆதிகாலத்தில் புத்தர் திருவுருவத்தை வைத்து வணங்காமல், பாத பீடிகை தருமச்சக்கரம் ஆகிய அடையாளங்களை வத்து வணங்கினார்கள். பிறகு. புத்தருடைய திருவுரு கற்பிக்கப்பட்ட காலத்தில், அவர்கள் புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள்.

மணிமேகலை சிலப்பதிகாரம் என்னும் நூல்கள் புத்தர் வணக்கத்தைக் கூறும்போது பாத பீடிகையையும் தரும பீடிகை யையும் கூறுகின்றன. ஏனென்றால் அந்தக் காலத்திலே புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்டு சிற்பிகளால் சிற்ப உருவங்களாகச் செய்யப் படவில்லை. இதனாலே மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் மிகப் பழமையானவை என்பது தெரிகிறது.