பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வண்ணமாகவும் இருந்த வண்ணமாகவும் அமைக்கப்படுகிறது. கிடந்த வண்ணமாக அமைக்கப்படுவது இல்லை. இதில் இவ்விரண்டு சமயங்களுக்கும் பொருத்தம் உண்டு.

வைணவ சமயத்தின் முதல் தெய்வமாகிய திருமாலின் சிற்ப உருவம், நின்ற வண்ணமாகவும் இருந்த வண்ணமாகவும் கிடந்த வண்ணமாகவும் அமைக்கப்படுகின்றது. அதுபோலவே, பௌத்த சமயத் தெய்வமாகிய புத்தர் பிரானுடைய திருவுருவமும் நின்ற, இருந்த, கிடந்தவண்ணமாக அமைக்கப்படுகின்றது. இந்த மூவகையமைப்பை நின்றான் இருந்தான் கிடந்தான் என்று கூறுவர். இந்த அமைப்பு முறையில் வைணவ சமயமும் பௌத்த மதமும் பொருத்தம்

உடையன.

சிவபெருமான் திருவுருவமும் திருமால் திருவுருவம் கூத்தாடும் உருவமாக அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றை நடராசர் மூர்த்தத்திலும், குடக்கூத்து காளிங்கமர்த்தனம் முதலிய மூர்த்தத்திலும் காணலாம். ஆனால், அருகர் புத்தர் உருவங்கள் கூத்தாடும் கோலமாக அமைக்கப்படுவது இல்லை. நிற்க.

இந்தக் கட்டுரையில் சிறப்பாகக் கூற வந்தது வேறு ஒன்றைப் பற்றியே. அது என்னவென்றால், இந்த நான்கு சமயத் தெய்வ உருவங்களின் கையமைப்பில் காணப்படும் சிறப்பியல்புகள்தாம். சிவபெருமான் திருவுருவத்திலும் திருமால் திருவுருவத்திலும் பொதுவாக நான்கு கைகள் அமைக்கப்படுகின்றன. சில சமயங்களில் எட்டு அல்லது பனினாறு கைகள் அமைக்கப்படுவதும் உண்டு இரண்டு கைகள் மட்டும் உள்ள சிவபெருமான் திருமால் திருவுருவங்களைக் காணமுடியாது.

2

சிவபெருமானுக்கு உள்ள நான்கு திருக்கைகளில் இரண்டு கைகள் வரத அபயக்கைகளாகவும், மற்ற இரண்டு கைகள் மான் மழு ஏந்திய கைகளாகவும் அமைக்கப்படுகின்றன. எட்டு, பதினாறு கைகள் அமைத்திருந்தால் அக் கைகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு ஆயுதங்கள் ஏந்தியிருப்பன போல அமைக்கப்படுகின்றன. திரு மாலின் நான்கு திருக்கைகளில் இரண்டு வரத அபயக்கரங்களாகவும், மற்ற இரண்டு கைகள் சங்கு சக்கரம் ஏந்திய கைகளாகவும் அமைக்கப் படுகின்றன. எட்டு, பதினாறு கைகள் அமைக்கப்பட்டால், அக்கைகள்