பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

59

வெவ்வேறு ஆயுதங்களைத் தாங்கியிருப்பன போன்று அமைக்கப் படுகின்றன.

சிவபெருமானின் சக்தியாகிய அம்மன் திருவுருவம் சிவ பெருமானுக்குப் பக்கத்தில் அமைக்கப்படுகின்றது, அம்மன் சிவபெருமானுக்கு ஆற்றலில் குறைந்தவர் என்பதைக் காட்டும் பொருட்டு, அவ்வுருவத்திற்கு இரண்டு கைகள் மட்டும் அமைக்கப் படுகின்றன. ஆனால், அம்மன் திருவுருவம் தனியாக அமைக்கப்படும் போது, நான்கு கைகளையுடையதாக அமைக்கப்படுகின்றது. அதுபோலவே, திருமாலின் சக்தியாகிய தாயார் (இலக்குமி) திருவுருவம் திருமாலுக்குப் பக்கத்தில் அமைக்கப்படும்போது, திருமாலின் ஆற்றலுக்குக் குறைந்த ஆற்றலுள்ளவர் என்பதைக் காட்டுவதற்காக, திருமகளுக்கு இரண்டு கைகள் மட்டும் அமைக்கப்படுகின்றன. திருமகள். திருவுருவம் தனிமையாக அமைக்கும்போது நான்கு கைகளையுடையதாக அமைக்கப் படுகிறது.

சைவ வைணவ சமயத்துச் சிறு தெய்வங்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இரண்டு கைகளை மட்டும் உடையவர்களாக அமைக்கப்படுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, பௌத்த சமண சமயங்களின் முதல் தெய்வங்களாகிய புத்தர் அருகர் திருவுருவங் களுக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. அந்தத் தெய்வங்களுக்கு நான்கு கைகள் அமைக்கப்படுவது இல்லை. ஆனால், அந்தச் சமயங்களின் சிறு தெய்வங்களுக்கு மட்டும் நான்கு கைகளும் எட்டுக் கைகளும் அமைக்கப்படுகின்றன. உதாரணமாகப் பெளத்த மதத்தின் சிறு தெய்வமாகிய போதிசத்துவர் எனப்படும் அவலோகிதருக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளும், தாராதேவிக்கு நான்கு கைகளும் உள்ளன. ஜைன சமயத்துச் சிறு தெய்வமாகிய பிரமயக்ஷன், ஜுவாலாமாலினி முதலியவர்களுக்கு நான்கு, எட்டுக் கைகள் உள்ளன. எதிரிலுள்ள படத்தைக் காண்க.

பெரிய

அஃதாவது, சைவ வைண வ ணவ சமயங்களின் தெய்வங்களுக்கு நான்கு கைகளும் சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளும் சிற்ப உருவத்தில் அமைக்கப்படுகின்றன. இதற்கு நேர் மாறாகச் சமண பௌத்த சமயங்களின் பெரிய தெய்வங்களுக்கு இரண்டு கைகளும், சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளும் சிற்ப ருவத்தில் அமைக்கப்படுகின்றன.