பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பழைய அழகு மறைந்துவிட்டது. எனினும் பல அருமையான சிறப்புகளும், இதை வடித்த சிற்பியின் நுட்பமான குறிப்பு களும் அழியாமல் இருக்கின்றன. இனி இந்தச் சிற்பத்தைப்

பார்ப்போம்.

சிவ

இந்தச் சிற்பத்திலே பருமான், உமாதேவியார், இரண்டு பூதகணங்கள், கங்கை ஆகி யோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் வலது காலை நிலத்தில் ஊன்றி, இடது காலைக் குறள் வடிவமுள்ள ஒரு பூதத்தின் தோளின்மேல் வைத்து நிற்கிறார். அவருக்கு இடப்பக்கத்தில்

உமா தேவியார், தம்முடைய வலக்கையைச் சிவபெருமானுடைய தொடையின் மேல் வைத்த வண்ணம் நிற்கிறார். சிவபெருமானுடைய வலக்காலின் பக்கத்தில் குறள் வடிவமுள்ள இன்னொரு பூதம் வெண்சாமரையைத் தோளின்மேல் சுமந்து கொண்டு. ஒரு கையை உயர்த்திச் சிவபெருமானைச் சுட்டுகிறது. பூதங்கள் எப்போதும் சிவபெருமானைச் சூழ்ந்துகொண்டிருப்பது வழக்கம். இதனைப் ‘பாரிடம் சூழவருவார்' என்னும் தேவார (பாரிடம்-பூதம்)ப் பகுதியால் அறியலாம்.

சிவபெருமானுக்கு, பக்கத்துக்கு நான்கு கைகளாக எட்டுக்- கைகள் இருக்கின்றன. சிவபெருமானின் சடைமுடியில் எப்போதும் இருக்கிற நீலாப் பிறை, ஊமத்தம்பூ, கொக்கிறகு, பாம்பு, இண்டை மாலை கியவை இச்சிற்பத்தில் இடம் பெறவில்லை. ஏனென்றால், முடித்திருந்த சடையை இப்போது அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஆகையால், அந்தப் பொருள்கள் இப்போது சடையில் காணப்பட வில்லை. பிரித்துவிட்ட சடையிலிருந்து ஒரு புரியை எடுத்து இடது கையில் அவர் பிடித்திருக்கிறார்; இன்னொரு கை (இடக்கை)யால் சடையின்புரி கீழே அவிழ்ந்து தொங்காமல் அவர் தாங்கிக்