பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இவ்விதமாகக் காட்சியளிக்கிற சிற்ப உருவத்துக்கு (இலிங்கோத் பவ மூர்த்தத்துக்கு) ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. தேவர்களில் மிகப் பெரியவர்களாகிய பிரமனும் திருமாலும் தாங்கள் தாங்களே முழுமுதற்கடவுள் என்று சொல்லிக்கொண்டார்களாம். இவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டபோது அவர்களுக்குள் இதுபற்றி வாதம் ஏற்பட்டது. பிரமன் தானே முழுமுதற் கடவுள் என்று கூறினார். திருமாலும் தானே முதற்தெய்வம் என்று கூறினார். இவர்களில் யார் முழுமுதற் கடவுள் என்பதையறியாமல் மற்றத் தேவர்கள் எல்லோரும் திகைத்தார்கள்.

அந்தச் சமயத்தில் சிவபெருமான் அவர்களுக்கு முன்பு தோன்றினார். அவர் அவர்களுக்குக் கூறினார். “உங்களில் யார் என்னு டைய முடியையாவது அடியையாவது காண்கிறீர்களோ அவரே முழுமுதற் கடவுள் ஆவீர்கள்” என்று கூறி, அவர்களுக்கு எதிரே மிக நீண்டு உயர்ந்த அழல் சோதி வடிவமாக நின்றார். பிரமன் அன்னத்தின் உருவங்கொண்டு அந்த அழற்சோதியின் முடியைக் காண்பதற்கு ஆகாயத்தில் உயர உயரப்பறந்து சென்றார். எவ்வளவோ உயரம் பறந்து சென்றும் அழற் சோதியின் திருமுடியை அவரால் காண முடியவில்லை. கடைசியில் பிரமனாகிய அன்னப்பறவை களைத்துப் போய் இறங்கி வந்துவிட்டது.

திருமால் காட்டுப் பன்றியின் உருவங்கொண்டு அழற்சோதியின் அடியைக் காண்பதற்காகத் தன்னுடைய கோரைப் பல்லினால் பூமியை அகழ்ந்துகொண்டு இறங்கிப் போனார். ஆழம் ஆழமாக அகழ்ந்து கொண்டே பாதாளம் வரையில் சென்றார். அங்கும் அழற்சோதியின் அடியைக் காண முடியவில்லை. கடைசியில் களைத்து இளைத்து இனி, மேலும் அகழ்வதில் பலனில்லை என்று கருதித் திரும்பி வந்துவிட்டார். பிரமனும் மாலும் சந்தித்துத் தாங்கள் இருவரும் முழுமுதற் கடவுள் அல்லர் என்றும் தங்களுக்கு மேற்பட்ட ஒழு முழு முதல் கடவுள் ஒன்று என்றும் அதுவே சோதி வடிவமாக நிற்கும் திருவுருவம் என்றும் ஒப்புக்கொண்டார்கள். இதுவே, இலிங்கோத்பவ மூர்த்தத்தைப் பற்றிய புராணக்கதை.

இந்த புராணக்கதை தெரிவிக்கிற தத்துவம் (உண்மை) என்ன? முழுமுதற் கடவுளாகிய இறைவன் சோதி வடிவமானவன், ஆதியும் அந்தமும் இல்லாதவன், தோற்றமும் முடிவும் இல்லாதவன்