பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

81

வழிபடப்பட்டது. சிவபெருமான் கோயிலில் அக்காலத்தில் சிவ பெருமான் உருவம் வைக்கப்படாமல் அவருக்கு அடையாளமாகத் திரிசூலத்தை வழிபட்டார்கள். பிறகு இலிங்க உருவத்தை (உருவம் இல்லாத பொருளாக) வைத்து வழி பட்டார்கள். திருமால் திருக்கோயில் களில் திருமால் உருவத்தை வைத்து வழிபடாமல் அவருடைய அடையாளமாகிய திருவாழியை (சக்கரத்தை) வைத்து வழிபட்டார்கள். ஏனென்றால் கண்ணுக்குப் புலப்படாமல் அருவமாக இருக்கிற கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்துவைக்க அக்காலத்தவர் விரும்ப வில்லை.

பிற்காலத்திலே கடவுளுக்கு உருவங்களைக் கற்பித்து அவ்வுரு வங்களைக் கோயில்களிலே வைத்து வழிபடத் தொடங்கினார்கள். கடவுளுக்கு உருவங்களைக் கற்பித்த போது, அவ்வுருவங்களை மனித உருவங்களாகக் கற்பித்தாலும், மனித உருவத்துக்கும் தெய்வ உருவத்துக்கும் வேற்றுமை தோன்றும்படி, தெய்வ உருவங்களுக்கு நான்கு கைகள், எட்டுக் கைகள், பத்துக் கைகள், பதினாறு கைகளைக் கற்பித்தார்கள். உருவம் இல்லாத கண்ணுக்குத் தெரியாத, எங்கும் பரந்திருக்கிற கடவுளுக்கு உருவத்தைக் கற்பிக்கவேண்டுமானால், இவ்வாறு பல கைகளை அமைக்கவேண்டும் என்று பெரியவர்கள் கருதினார்கள். கண்ணுக்குத் தெரியாமல், உருவமும் இல்லாமல், அண்ட வெளியிலே கலந்திருக்கிற பரம்பொருளின் திருமேனி ஆகாயமே என்றும், திசைகளே அவருடைய திருக்கைகள் என்றும் அவர்கள் கற்பித்தார்கள். திசைகள் நான்காகையால் அவருடைய திருக்கைகள் நான்காகவும், திசைகளை எட்டாகவும் கூறப்படுவதால் திருக்கைகள் எட்டாகவும், திசைகள் பதினாறாகவும் கூறப்படுவதால் திருக்கைகளைப் பதினாறாகவும் கற்பித்தார்கள். எட்டுத் திசைகளோடு மேலுலகத்தையும் கீழுலகத்தையும் சேர்த்துத் திசைகள் பத்தாகவும் கூறப்பெறுவதால் கடவுளின் திருக்கைகளைப் பத்தாகவும் கற்பித் தார்கள். இதனால்தான் கடவுள் உருவங்களுக்குக் கைகள் நான்கு, எட்டுப், பத்து, பதினாறு எனக் கற்பிக்கப்பட்டு அவ்வாறே அ ஒவியத்திலும் சிற்பங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தெய்வச் சிற்ப உருவங்களைப்பற்றிச் சைவசமய நூல்களிலும் வைணவ சமய நூல்களிலும் அறியலாம்.

நற்றிணை என்னும் சங்க நூலுக்குப் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துப்பாடிய பெருந்தேவனார், திருமாலைப் பாடுகிறார்.